10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு அச்சகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு அச்சகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

கேரளா, திரிச்சூர் மாவட்டத்தில் கொரட்டியில் உள்ள இந்திய அரசு அச்சகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
nov 9  vazhikatti  printing
1. நர்ஸ் : 1 இடம்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்சிங்கில் ஏ கிரேடு.

2. கேன்டீன் கிளார்க்: 2 இடங்கள்.

தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன்.

3. கேன்டீன் அட்டென்டென்ட்: 3.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

4. அசிஸ்டென்ட் பைன்டர்: 31.

தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சி.

5. காப்பி ஹோல்டர்: 4 இடங்கள்.

தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிரபல அச்சகத்தில் புருப் ரீடிங் பணியில் 2 வருட அனுபவம்.

6. மெக்கானிக்: 5இடங்கள்.

தகுதி: மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோவுடன் அச்சக இயந்திரங்களை பராமரித்தல் / பழுதுபார்ப்பதில் 2 வருட பணி அனுபவம்.

7. அசிஸ்டென்ட் மெக்கானிக் : 5 இடங்கள்.

தகுதி: மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோவுடன் அச்சக இயந்திரங்களை பராமரிப்பது/பழுது பார்ப்பதில் ஒரு வருட பணி அனுபவம்.

8. எலக்ட்ரீசியன்: 1 இடம்.

தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோவுடன் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

9. வயர்மேன்: 2 இடங்கள்.

தகுதி: எலக் ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ள மோவுடன் மின்பணியாளர் தகுதி சான்று.

10. வெல்டர்: 1 இடம்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டிங் டிரேடில் ஐடிஐயுடன் 3 வருட பணி அனுபவம்.

11. கார்பென்டர்: 1 இடம்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் டிரேடில் ஐடிஐ மற்றும் 3 வருட பணி அனுபவம்.

12. சீனியர் ஆர்ட்டிஸ்ட்: 1

தகுதி: பைன் ஆர்ட்ஸ்/ கமர்ஷியல் ஆர்ட்ஸ்/ கிராபிக் டிசைன் பிரிவில் பட்டப்படிப்புடன் கமர்ஷியல் டிசைனிங், கிராபிக் டிசைனிங், லே அவுட் மேக்சிங்கில் 2 வருட பணி அனுபவம்

13. ஜூனியர் ஆர்டிஸ்ட்: 1 இடம்

தகுதி: பைன் ஆர்ட்ஸ்/கமர்சியல் ஆர்ட்ஸ் கிராபிக் டிசைன் பிரிவில் பட்டப்படிப்புடன் கமர்ஷியல்/கிராபிக் டிசைனிங்கில் ஒரு வருட பணிஅனுபவம்.

14. ஆர்ட்டிஸ்ட் ரீடச்சர்: 1 இடம்

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்தபின் 2 வருட பணிஅனுபவம்.

15. அசிஸ்டென்ட் ஆர்டிஸ்ட் ரீடச்சர்: 1

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்த பின் ஒரு வருட பணிஅனுபவம்.

16.கேமராமேன்: 1.

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் புராசஸ் காமிரா பணியில் 3 வருட பணிஅனுபவம்.

17. டார்க் ரூம் அசிஸ்டென்ட்: 2.

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் 2 வருட பணிஅனுபவம்.

18. பிளேட் மேக்கர்: 2 (பொது)

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சியுடன் வருட பணி அனுபவம்.

19. அசிஸ்டென்ட் பிளேட் மேக்கர் (ஆப்செட்): 1 (பொது).

தகுதி: 10ம் வகுப்பு தேர்சசிக்குப் பின் பிளேட் மேக்கிங் டிரே டில் ஐடிஐயுடன் 3 வருட அனுபவம் அல்லது பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சியுடன் 5 வருட பணிஅனுபவம்.

20. டிடிபி ஆபரேட்டர்: 2.

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் கம்ப்யூட்டர் இயக்குவதில் 3 வருட பணி அனுபவம் மற்றும் இந்தி, ஆங்கிலம் டைப்பிங்கில் அனுபவம்.

21. ஆப்செட் மிஷின் மேன்: 25.

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி ஆப்செட்டில் டிப்ளமோவுடன் சிங்கிள் மற்றும் மல்டி கலர் ஆப்செட் பிரின்டிங் மிஷினில் 5 வருட பணி அனுபவம்.

22. ஆப்செட் மிஷின் அசிஸ்டென்ட்: 17.

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் சிங்கிள் மற்றும் மல்டிகலர் ஆப்செட் பிரின்டிங் மெஷினில் 3 வருட பணிஅனுபவம்.

23. ஆப்சென்ட் மிஷின் அட்டென்டென்ட்: 19.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டீசுடன் ஆப்செட் மிஷினில் 3 வருட பணி அனுபவம்.

24. அட்டென்டென்ட் (ஆப்செட்) 3.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டீசுடன் ஆப்செட் மிஷினில் 3 வருட பணி அனுபவம்.

25. ரிசோகிராப் ஆபரேட்டர்: 2 (பொது)

தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் 2 வருட பணிஅனுபவம்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.dop.nic.in/என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2013.

error: Content is protected !!