September 25, 2021

சென்னையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார் ‘செஸ்’ஆனந்த்!

நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்றில் டிரா செய்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 6.5 & 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இந்த பட்டத்தை வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையையும் மிக இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது(முன்னதாக, 1985ல் கேரி காஸ்பரோவும் 22 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்). இதையடுத்து வெற்றி வீரர் கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடியும் ஆனந்துக்கு ரூ.5.60 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
nov 23 - chess carlsen_
தமிழக அரசின் ஆதரவுடன், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) இடையிலான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.

முன்னதாக் நடைபெற்ற 9 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 6-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். எனவே, எஞ்சியுள்ள 3 சுற்றுகளில் ஒரு சுற்றில் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதேசமயம் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து 3 சுற்றுகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்படியே வென்றாலும் டைபிரேக்கர் பந்தயத்தில் வென்றால்தான் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று 10-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. கடும் நெருக்கடியுடன் ஆடிய ஆனந்த், கார்ல்சனின் நகர்த்தலுக்கு சரியான பதிலடி கொடுத்து முன்னேறினார். ஆனால், அவரால் வெற்றியை நெருங்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போட்டியை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 6.5 புள்ளிகள் பெற்ற கார்ல்சன் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

1991ல் தொடங்கி 22 ஆண்டுகளில், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாதது ஆனந்துக்கு இதுவே முதல் முறை ஆகும். இந்த தோல்வி குறித்து விஸ்வநாதன் ஆனந்த் ,”உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நகர்த்தல்களில் செய்த தவறுகள் காரணமாக வெற்றி வாய்ப்பு பறிபோனது. குறிப்பாக 5-வது சுற்று ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஆட்டம் வெற்றியை முடிவு செய்வதாக இருந்தது. வெற்றி பெற்ற கார்ல்சனுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த போட்டியைத் தொடர்ந்து சில காலம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளேன்.”என்று அவர் கூறினார்.

Carlsen dethrones Anand to become new world chess champion

*****************************************************************
Five-time title-holder Viswanathan Anand’s reign as the world champion came to a heart-breaking end on Friday with Norway’s Magnus Carlsen taking the crown after a hard-fought draw in the 10th game of the World Chess Championship match, which ended on Friday.