September 21, 2021

ஐ.டி.ஐ.,முடித்தவர்களுக்கு மத்திய நீர்வள ஆணையத்தில் பணி!

இந்தியாவின் நீர்வள ஆதாரங்கள் தொடர்புடைய தொழில் நுட்பபணிகளை சென்ட்ரல் வாட்டர் கமிஷன் எனப்படும் மத்திய நீர்வள ஆணையம் செய்து வருகிறது.

மத்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. வெள்ளக் கட்டுப்பாடு, விவசாயம், நேவிகேஷன், குடிநீர் வழங்குதல், நீர்வழி மின்திறன் உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளில் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டென்ட் பிரிவில் உள்ள 74 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. சி.டபிள்யூ. சி.,யின் ஸ்கில்டு ஒர்க் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
21 - vazhikatti c w c
தகுதிகள்: 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ., படிப்பு அல்லது இதற்கு நிகரான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் அட்டெஸ்டு செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

The Superintending Engineer,
Central Water Commission,
Godavari Circle, H.No. 11-4-648 (Room No. 304) Krishna Godavari Bhavan,
A.C.Guards, Hyderabad – 500 004

விண்ணப்பிக்க இறுதி நாள் : 08.11.2013. முழு விபரங்களை அறிய

பார்க்க வேண்டிய இணையதள முகவரி:http://www.cwc.gov.in/