March 21, 2023

திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

2019ஆம் ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான தேசியத் தகுதித் தீர்வு – ‘நீட்’ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் இந்திய மாநிலங்களில் தமிழகத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியிருக் கிறார்கள்; தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து 17,067 பேர் தேர்வெழுதி 11,121 பேர் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதாவது தேர்வெழுதியவர்களில் 65.16 சதவீதம் பேர்.

ஆந்திர மாநிலத்தில் தேர்வெழுதியவர்களில் 58.2 சதவீதம் பேரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் 60.59 சதவீதம் பேருமே தேர்ச்சியடைந்துள்ளன.

மோதியின் குஜராத்திலிருந்து தேர்ச்சியடைந்தவர்கள் 55.7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி. நீண்ட காலமாக பா.ஜ.க. ஆட்சியிலிருந்த ம.பியில் 41.67 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி. யோகி ஆதித்ய நாத்தின் உ.பியில் தேர்ச்சியடைந்தவர்களின் சதவீதம் 42.97.

இந்தத் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைவிட அதிக சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தது ‘கம்மீஸ்’ ஆளும் கேரளாவில். இங்கு தேர்வெழுதியவர்களில் 75.13 சதவீதம் பேர் தேர்ச்சி. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில்பார்த்தால், தமிழகத்தைவிட மிகக் குறைவு.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இந்தியா முழுவதும் தேர்வானவர்களில் 14.51 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது ஏழில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர். இந்த 11 ஆயிரத்து 100 பேரில் எவ்வளவு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் இருப்பார்கள்?

இங்குதான் கடந்த ஐம்பதாண்டுகளாக திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு கேட்கிறது.

தேர்வு முடிவின் இணைப்பு  காண க்ளிக் செய்யுங்க

அப்படியே இணைக்கப்பட்டிருக்கும் கேள்வி – பதில் ஒன்றையும் படித்துவிடுங்கள்.

முரளிதரன் காசி விஸ்வநாதன்