Exclusive

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே அருணாச்சல பிரதேசம்: அமெரிக்கா ஒப்புதல்!

ட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஆக்கிரமிக்க, சீனா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என, ஒன்றிய அரசு உறுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. தீர்மானத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான சர்வதேச எல்லையாக மக்மஹன் கோடு அங்கீகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அங்கீகரிப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், இந்தோ – பசுபிக் பகுதிக்கும் சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள செனேட்டர் பில் கெஹேர்டி, இந்த நேரத்தில், இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்பது அமெரிக்காவுக்கு முக்கியமானது என்றார்.

மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் இந்த அரிதான தீர்மானம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் இந்தத் தீர்மானம் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை அமெரிக்க-இந்தியா இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவுகிறது. மற்றும் தென்கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து குவாட் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் மூலம் இந்தியாவுடனான நமது பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.

aanthai

Recent Posts

லாபத்துடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் விற்பனை!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.…

7 hours ago

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 2024 வரை நீட்டிப்பு!

ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட…

8 hours ago

லாட்டரி திட்டம் மூலம் அரசுக்கு மிகத் துல்லியமான வரி வசூல்!

ஒரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும். கண்டிஷன்கள்: அதிரடி ரெய்டுகள் கூடாது. வரிகளை அதிகப்படுத்தக்கூடாது. மக்கள் கழுத்தில்…

13 hours ago

நாடெங்கும் விற்பனைப் பொறுப்புகளில் பாலின இடைவெளி!

இந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச்…

13 hours ago

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புத் துளிகள்!

ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர்…

13 hours ago

அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக…

1 day ago

This website uses cookies.