ஹஜ் ; 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு!

ஹஜ்  ; 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு!

ஜ் பயணத்திற்கு 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விபரம் இதோ :-–

ஹஜ் -2022ஆம் ஆண்டிற்கான தற்காலிக வழிகாட்டுதல்களில், பத்தி.4-ல் பகுதி மாற்றம் செய்து, தற்போது மும்பை இந்திய ஹஜ் குழுவானது, ஹஜ் -2022ஆம் ஆண்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்பும் வயதான புனித பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகபட்ச வயது வரம்பினை ரத்து செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவிப்பு செய்ததில் தகுதியற்றவராகக் கருதப்பட்ட, 65 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தற்போது ஹஜ்- 2022-க்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 70 வயது பூர்த்தியடைந்த அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரருடன் ஒரு துணைப் பயணி விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் 2022ஆம் ஆண்டிற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான முழு செயல்முறையும் சவுதி அரேபிய அரசு மற்றும் இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கு உட்பட்டது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!