ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..கலாம்…லாம்! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..கலாம்…லாம்! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தூத்துக்குடியில் 13 பேர்களின் உயிர் பலி வாங்கிய ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,ஆலையை திறக்க தடைவிதித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவும் ரத்தும் செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பபட்ட நிலையில், ஆலையை மூடி தமிழகஅரசு சீல் வைத்தது. இந் நிலையில், ஸ்டெர் லைட் ஆலையின் நிர்வாகம், டி ல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கியது. தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள முழு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஸ்டெர்லட் ஆலை நிறைவேற்றி பின்னர் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதி மன்ற தீர்ப்பு காரணமாக தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து வைகோ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசியப் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனது மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொண்டு, என்னையையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையினை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. நீர் மாசு ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு இதில் முடிவெடுக்கலாம் என்று தான் கூறியுள்ளது. வேதாந்தா தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் பிரச்னை முடிவுக்கு வரும் என்பது என் கருத்து. ஆனால் தமிழக அரசு இதில் கொள்கை முடிவு எடுக்காது. ஏனென்றால் தமிழக அரசு மறைமுகமாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் இரண்டும் இணைந்து தான் செயல்படுகின்றன” என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!