ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் டிரெய்னி வாய்ப்பு!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் டிரெய்னி வாய்ப்பு!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனம், மத்திய அரசின் நேரடிப் பார்வையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் சேலம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
sail
தற்போது ‘பிலாய் ஸ்டீல் பிளான்ட்’ கிளையில் அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்), ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) உள்ளிட்ட 558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ எஞ்சினியரிங் பிரிவுகளில் மெட்டலர்ஜி படித்தவர்களுக்கு 195 இடங்களும் எலக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு 60 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 106 இடங்களும் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) – 119
ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) – 414
ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பாய்லர் ஆபரேஷன்) – 25

வயது வரம்பு:

1.12.2014 தேதியில் 18 வயது முதல் 28 வயது உடையவர்கள் ‘அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன்’ மற்றும் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கலாம். பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள் .28.1.2015 

மேலும் விரிவான விவரங்களுக்கு காண்க: www.sail.co.in

error: Content is protected !!