ஸ்கைப் காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஸ்கைப் காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஸ்கைப் இன்னும் வாய்ஸ் மற்றூம் வீடியோ சாட்களுக்கு மிக பிரசித்தம். இது கொஞ்சம் நாளாய் டல்லடிக்க தொடங்கியது, காரணம் இதற்கென்று தனியே சாஃப்ட்வேர் பொருத்த வேண்டும் அது போக பிரவுசிங் செய்யும் போது பிரவுசரை மினிமைஸ் பண்ணி இதனுள் நுழைந்து சாட் செய்ய வேண்டியதால் பல பேர் இதனை உபயோக்கிப்பதை நிறுத்தினர். இந்த கொடுமையோடு வின்டோஸ் 8 வைத்திருப்பவர்கள் தான் இன்னும் பாவம். இவர்கள் ஸ்கைப்பை ஆப்ஸ் போலத்தான் உபயோகிக்க வேண்டும்.
ravi skype
அதாவது ஸ்கைப் உபயோகிக்கும் போது பிரவுஸ் செய்யவோ மற்ற கணனி வேலையோ செய்ய முடியாது அதனால் வின்டோஸ் 8 வைத்திருக்கும் அனைவரும் இந்த ஸ்கைப்பை அனேகமாய் மறந்தனர் என்றே சொல்ல வேண்டும் – ( நான் உட்பட). இதை உணர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஸ்கைப் இனிமேல் தனியாக ஆப்ஸ் அல்லது சாஃப்ட்வேர் வழி இல்லாமல் நேரடியாக நீங்கள் உபயோகிக்கும் பிரவுசர்களில் ஒரு எக்ஸடன்ஸன் அல்லது பிளகின் போல பொருத்தி கொள்ள முடியும்.

இதனால் நீங்கள் பிரவுஸ் செய்யும் போதே பாப் அப் செய்யும் அதனால் வேலையும் நேரமும் மிச்சம். இந்த வகை ஸ்கை பிளகின்கள் – இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் / கூகுள் குரோம் / ஃபையர் ஃபாக்ஸ் பிரவுசர்களுக்கு இப்போது வந்துவிட்டது. மகிழ்ச்சியான செய்தி ஸ்கைப் காதலர்களுக்கு.

Skype finally learned a lesson and released Browser based Plugin

error: Content is protected !!