வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

வி.சேகர் இயக்கும் “சரவணப் பொய்கை” ஆல்பம்!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் “சரவணப்பொய்கை”இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல்மார்க்ஸ். இவர் BE, MBA பட்டதாரி.
கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார்.படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் – கருணாஸ் இருவரும் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,”இது முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காமெடி காதல்கதை !தியேட்டர் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இதில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.எம்.எஸ்.பாஸ்கரின் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் கதாநாயகன் சரவணனுக்கும் தியேட்டர் அதிபரின் மகள் அருந்ததிக்கும் உள்ள காதல். டிக்கெட் கிழிப்பவராக கருணாஸ் காமெடியில் கலக்கி இருக்கிறார்.இந்த படத்தில் நடிகர் விவேக் நடிகராகவே நடிக்கிறார். நடிகராக நடித்து காமெடியில் கலக்கி இருக்கிறார் என்றார் இயக்குனர் வி.சேகர்.சரவணபொய்கை படம் வி,சேகர் இயக்கும் 18 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!