விஷாலின் ’ஆம்பள’ ஸ்டோரி + ஸ்பெஷல் ஸ்டில்ஸ் + டிரைலர்!
அரண்மனை படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கும் படம் ‘ஆம்பள’. இதில் விஷால் ஹீரோவாகவும், ஹன்சிகா ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.தனது முந்தைய படத்தில் திரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த படத்தில் கிளாமர் கலந்த காமெடியை அள்ளி தெளித்ஹு உள்ளாராம். அதுவும் ஹீரோயின் கிளாமர் மட்டும் இல்லையாம். கூடவே ஆண்ட்டிகளின் அட்டகாசமான கிளாமரும் இருக்கிறதாம். அதாவது ஹீரோ விஷாலுக்கு மூன்று அத்தைகள்.
ரம்யா கிருஷ்ணன், கிரண், மற்றும் ஐஸ்வர்யா. இந்த மூன்று அத்தைகளுக்கும் ஆளுக்கொரு மகள். ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகா, கிரணுக்கு மகளாக மதுரிமா, மற்றும் ஐஸ்வர்யாவுக்கு மகளாக மாதவி லதா. மேலும் விஷாலின் அப்பாவாக பிரபு நடித்திருக்கிறார். இதற்கு முன்பு விஷால் நடித்த சில படங்களில் ராஜ்கிரண் உள்ளிட்ட சில அப்பாக்கள் கண்டிசன் பேர்வழிகளாக நடித்திருந்தனர்.ஆனால், இந்தப்படத்தைப் பொறுத்தவரை ரொம்ப ஜாலியான அப்பாவாக நடித்துள்ளாராம் பிரபு. குறிப்பாக, தனது மகன்களான விஷால், வைபவ் ஆகியோரை அவர்களின் முறைப்பெண்ணை காதலிக்க சொல்லி அனுப்புவதே அவர்தானாம். அதையடுத்து தங்களது அத்தை மகள்களை காதலிக்க சென்ற இடத்தில் என்னென்ன விஷயங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதையாம்.
டிரைலர் லிங்க்:https://www.youtube.com/watch?v=NohOBlQDEr0