விவசாயிகளின் நலன் கருதி புதிய உத்தரவு! – மோடி ரேடியோ பேச்சு!

விவசாயிகளின் நலன் கருதி புதிய உத்தரவு! – மோடி ரேடியோ பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை நாட்டு மக்களுடன் ‘மன் கி பாத்’ (‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’) என்ற தலைப்பில், அகில இந்திய வானொலியில் பேசி வருகிறார். இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயி கள் நலனுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தயார் என்று உறுதிஅளித்து உள்ளார்.
Modi Radio Maan-Ki-Baat
பிரதமர் மோடி இன்று வானொலியில் பேசும் போது, “ஜன் தன் யோஜனா திட்டத்திற்கு மக்கள் இவ்வளவு ஆதரவு அளித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை மக்களால் 17.74 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

குஜராத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தேசத்திற்கு பெரிதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளது. மகான்கள் அவதரித்த குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையை பொதுமக்கள் மிக குறுகிய காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவந்து உள்ளனர். மீண்டும் குஜராத்தில் அமைதி கொண்டுவரப்பட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. விவசாயிகளை பயமுறுத்தவோ, குழப்பம் ஏற்படுத்தவோ யாரையும் அனுமதிக்கமாட்டோம்.

நிலம் கையகப்படுத்தும் அவசரசட்டம் நாளையுடன், காலாவதியாக உள்ளாது. அமலில் உள்ள அவசர சட்டத்தை காலாவதியாக அனுமதித்து உள்ளோம். விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் 13 முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெறும். நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் விவசாயிகளின் நலன் கருதி புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

விவசாயிகள் நலனுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தயாராக இருக்கிறோம். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் பிரகடனப்படுத்த மாட்டோம். விவசாயிகள் குரலுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கப்படும். என்று கூறினார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காததே டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணம் என்று கூறிய பிரதமர் தூய்மையாக வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

Related Posts

error: Content is protected !!