வில்லேஜிலிருந்து சிட்டி லைஃப்புக்கு 300 கோடி பேர் வாராங்கோ!

வில்லேஜிலிருந்து சிட்டி லைஃப்புக்கு   300 கோடி பேர் வாராங்கோ!

முன்னொரு காலத்தில் நம் தமிழ்கத்தில் சென்னை என்பது மட்டும்தான் நகரம் என்று சொல்லப்பட்டதும், நாம் பிறந்து வளர்ந்த ஊர் எல்லாம் சின்னக் கிராமம் போலதான், அதை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த எல்லாமே பட்டிக்காடு ! இன்று திரும்பி பார்த்தால்……. பக்கத்து ஊர் என்பது டவுன்,.ஆகி எங்கெங்கு திரும்பினும் ஷாப்பிங் மால், தியேட்டர், தங்க நகை கடை என்று ஜொலிக்கிறது அப்போது சென்னை என்பது என்ன……. சூப்பர் நகரமா ?! அப்போ நியூயார்க், சிகாகோ, லண்டன், டோக்யோ என்பதெல்லாம் நகரம் என்று சொல்லிவிட முடியுமா ?! தொழில்நுட்ப வளர்ச்சியில் நேற்றைய கிராமங்கள் எல்லாம் நகரங்கள் ஆகியது, இன்றைய கிராமம் நகரம் ஆகி கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்நிலையில் வரும் 2050-ம் ஆண்டில் இந்திய நகரங்களில் புதிதாக வசிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி அதிகரிக்கும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

city may 18

ஐ.நா.வின் வாழ்விடம் பற்றிய துறை, ‘நகரமயமாக்கம் மற்றும் வளர்ச்சி: எதிர்காலம்’ என்ற தலைப்பில் ‘உலக நகரங்கள் அறிக்கை 2016’ஐ முதல்முறையாக வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. வரும் 2050-ம் ஆண்டில் இந்திய நகரங்களில் புதிதாக வசிக்க குடியேறும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக 30 கோடி அதிகரிக்கும். எனவே, அவ்வளவு மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய நகரங்களை உருவாக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகரங்கள் ஏற்கெனவே 60 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே, இந்திய அரசுக்கு கூடுதலாக நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. தெற்காசிய நாடுகளில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள டாகா, மும்பை, டெல்லி, கராச்சி, லாகூர் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் மெகா சிட்டிகளாக மாறி வருகின்றன. நகரங்களில் குடியேறுபவர்கள் நகரங்களை விரிவாக்கம் செய்ய வேண்டியது சவாலாக இருக்கும்.

இந்தியாவில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நகரங்களில் வேலைவாய்ப்பு 3.22 சதவீதம் அதிகரித்துள்ளது. நகரமயமாக்கல் ஒரு வகையில் கிராமப்புறங்களில் உள்ள வறுமை ஒழிப்புக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த நிலையில் திட்டமிடப்படாத நகரங்களில் நிலவும் இடப் பற்றாக்குறை இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது” என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!