விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும் “ வெள்ளகார துரை “

விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும்  “ வெள்ளகார துரை “

1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.

படம் பற்றி எழிலிடம் கேட்ட போது.”ஜனரஞ்சகமான படம் வெள்ளக்கார துரை. கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் சிலரை பார்த்து வெள்ளகார துரை என்று சொல்வார்கள் அப்படியொரு ஜாலியான கதாப்பாத்திரம் தான் விக்ரம்பிரபுவுக்கு. விக்ரம்பிரபு வில்லேஜ் சப்ஜெக்டில் நடிக்கும் முதல் படம் இது. ரியல் எஸ்டேட்டின் நல்லது, கெட்டதுகளை இதில் தொட்டிருக்கிறோம். எனது 9 வது படம் இது. . படப்பிடிப்பு சென்னை, தஞ்சை மாவட்டங்கள், மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது. “என்றார்

Related Posts

error: Content is protected !!