வாட்ஸ் அப்’ தகவல்களை 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்

வாட்ஸ் அப்’ தகவல்களை 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்

மத்திய அரசின் புதிய கொள்கையால்,‘வாட்ஸ் அப்’ மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல் களையும், உரையாடல்களையும் 90 நாட்களாவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டி இருக்கும். போலீசோ அல்லது இதர விசாரணை அமைப்புகளோ கேட்கும்போது, அந்த தகவல்களை அளிக்க வேண்டும்.
whatapp follow
வாட்ஸ் அப், கூகுள் ஹேங்க் அவுட்ஸ், ஆப்பிள்ஸ் ஐமெசேஜ் போன்றவை மூலமாக தகவல் களை அனுப்புவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக, தேசிய வரைவு கொள்கை ஒன்றை உருவாக்கி உள்ளது. மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைத்த வல்லுனர் குழு, இந்த வரைவு கொள்கையை உருவாக்கி உள்ளது.பொதுமக்கள் மற்றும் அமைப்புகளிடம் கருத்துகளை கேட்பதற்காக, அந்த கொள்கை நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்த கொள்கையின்படி, ‘வாட்ஸ் அப்’ தகவல்களையும், உரையாடல்களையும் அவை பரிமாறிக் கொள்ளப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்கு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். போலீசோ அல்லது இதர விசாரணை அமைப்புகளோ கேட்கும்போது, அந்த தகவல்களை அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கையை சந்திக்க வேண்டி இருக்கும். 90 நாட்க ளுக்குள் தகவல்களையும், உரையாடல்களையும் நீக்குவது, சட்ட விரோதமாகும்.

இந்த விதிமுறை, அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த கொள்கை தற்போதைய வடிவிலேயே அமல்படுத்தப்பட்டால், ‘வாட்ஸ் அப்’ தகவல்களை 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டி இருக்கும். அதே சமயத்தில், இது இணைய பக்கங்களில் ஊடுருவி தகவல்களை திருடுபவர் களுக்கு வசதியாக அமைந்து விடும் என்றும் அஞ்சப்படுகிறது.இந்த கொள்கை குறித்து அக்டோபர் 16–ந் தேதிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!