வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கணும்னு கட்டாயமில்லேப்பா! – சக்சேனா விளக்கம்!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கணும்னு கட்டாயமில்லேப்பா! – சக்சேனா விளக்கம்!

வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது மாநகராட்சி பகுதி அலுவலகம்/ மண்டல அலுவலகத்தில் தங்களது ஆதார் எண், செல்போன் எண், இ–மெயில் முகவரியை எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த விலாசத்தில் அவர்கள் குடியிருக்கவில்லை என கருதி வாக்காளர் பதிவினை நீக்கம் செய்ய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
aadhar 24
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று அளித்த விளக்கத்தில்,”தமிழ்நாட்டில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 5.54 கோடி (98.72 சதவீதம்) வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 4.97 கோடி (88.49 சதவீதம்) வாக்காளர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆயத்த நிலையில் உள்ளது.

இந்நிலையில், ஆதார் எண்ணை அளிப்பது வாக்காளர்களின் சுய விருப்ப அடிப்படையிலானது என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி கூறியுள்ளது. ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால் எந்த ஒரு வாக்காளருக்கும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு சேவையும் மறுக்கப்படாது. ஆதார் எண் அளிக்காததால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட மாட்டாது.

வாக்காளர் பட்டியல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு ஆகியவற்றிலோ, பொதுமக்கள் பார்க்கத்தக்க வகையில் வலைத்தளத்திலோ, பொதுமக்களுடன் பகிரத்தக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு ஆவணத்திலோ அல்லது பொதுத் தளத்திலோ வாக்காளரின் ஆதார் எண் காண்பிக்கப்பட மாட்டாது. ”என்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!