வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம்

வரி விலக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ‘ வணக்கம் சென்னை’ ஸ்பெஷல் ஆல்பம்

இதற்கு முன்பு எந்த டைரக்டரிடமும் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்க்காமலேயே ஒரு படத்தை முழுசாக டைரக்ட் செய்து விட்ட உற்சாகத்தில் இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. போதாக்குறைக்கு படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் வேறு கிடைத்து விட்டதால் கூடுதல் சந்தோஷம்.சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் காம்பினேஷனில் தயாராகியிருக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் கணவர் உதயநிதி தயாரித்துள்ள கிருத்திகாவின் இந்த படத்தை சமீபத்தில் தான் சென்ஸார் அதிகாரிகள் பார்த்தனராம்.பார்த்த மாத்திரத்திலேயே படத்துக்கு யு சர்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்கள். ஆனால் வழக்கம் போல் வரி விலக்கு கிடைக்க அரசு ஏதாவது சாக்கு போக்கு சொல்லும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிருக்கும் உதயநிதி வழக்கம் போல நிதிக்காக நீதி மன்றத்தை நாடவும் தயாராகவே இருக்கிறாராம்

கோடங்கி

error: Content is protected !!