வந்தார்கள்.. வெள்ளச் சேதத்தைப் பார்த்தார்கள்.. சென்று விட்டார்கள்!

வந்தார்கள்.. வெள்ளச் சேதத்தைப் பார்த்தார்கள்.. சென்று விட்டார்கள்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களை மத்தியக் குழு ஆய்வு செய்து அதிக அளவில் நிவாரணத் தொகை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.

tn rain nov 28

இதை ஏற்று மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமை யிலான மத்திய அதிகாரிகள் கொண்ட குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது. முதல் நாளில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங் களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், நேற்று கடலூர் மாவட்டத் தில் ஆய்வு செய்தனர்.

இன்று வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். இன்று மாலையில் இந்த குழுவின் மூன்று நாள் கள ஆய்வு நிறைவு செய்தது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. இதற்காக இந்தக்குழு இன்று மாலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றது.

இதனிடையே இக்குழு தலைவர் டி.வி.என்.எஸ்.பிரசாத் செய்தியாளர்களிடம், “வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருப்பது கள ஆய்வின்போது தெரிந்தது.வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை யை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்வோம். தமிழக அரசு கேட்டுக்கொண்ட இடங் களில் ஆய்வு நிறைவடைந்தது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,கடலூர், ஆகிய மாவட்டங் களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப் பட்டது”என்று அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!