‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

‘வட்டியும் முதலும்’ ராஜுமுருகன் இயக்கும் “குக்கூ” ! மினி ஆல்பம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘குக்கூ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமியிடம் ‘பீமா’, ‘பையா’ ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார்.டைம் பாஸ் நிறுவன இதழில் இவர் எழுதிய தொடர் ‘வட்டியும் முதலும்’பெரும் வரவேற்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

‘அட்டகத்தி’ படத்தில் ஹீரோவாக நடித்த தினேஷ், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மலையாளப் பதிப்பான ‘பிளாக் பட்டர்பிளை’ படத்தில் நடித்த மாளவிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘குட்டிப்புலி’ புகழ் முருகதாஸ், ‘ஆரண்ய காண்டம்’ புகழ் சோமசுந்தரம், இயக்குநர் ஈ.ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி கூறிய இயக்குநர் ராஜு முருகன், “நாம் அன்றாடம் சந்திக்கும், ஆனால் கவனிக்கப்படாத எளிய மனிதர்களீன் காதல், அன்பு, உணர்வுகளை சந்தோஷமாக, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாக உள்ளது.” என்றார்.

error: Content is protected !!