வடிவேலு – சதா நடிக்கும் எலி! மினி ஆல்பம்

வடிவேலு – சதா நடிக்கும் எலி! மினி ஆல்பம்

தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்திருக்கும் படம் ‘எலி’. இப்படத்தையும் ‘தெனாலிராமன்’ யுவராஜ் தயாளனே இயக்கியிருக்கிறார். வடிவேலுவுக்கு ஜோடியாக இப்படத்தில் ‘அந்நியன்’ சதா நடித்திருக்கிறார். கொள்ளைக்கூட்டம் ஒன்றில் கொள்ளையனாகப் புகுந்து வேவு பார்க்கும் வேலையே வடிவேலுக்கு ‘எலி’ படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தில் ஒரு முழு இந்தி பாடலுக்கு வடிவேலுவும், சதாவும் இணைந்து நடனமாடியுள்ளனர்.


1969-ஆம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா, சர்மிளா தாகூருடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆராதனா’. இப்படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற பாடலை முறையாக உரிமம் பெற்று, நடன இயக்குனர் தாராவின் நடனத்தில் வடிவேலுவும், சதாவும் நடனமாடியுள்ளனர். இந்த பாடலை மூணாரில் படமாக்கியுள்ளனர்.

ஒரு தமிழ் படத்தில் ஒரு முழு இந்தி பாடல் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் சேனல் உரிமையை ஜெயா டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

error: Content is protected !!