ராம பிரான் நேட்டிவ் அயோத்தி கிடையாது- பாகிஸ்தானாக்கும்! – புதிய சர்ச்சை!!

ராம பிரான் நேட்டிவ் அயோத்தி கிடையாது- பாகிஸ்தானாக்கும்! – புதிய சர்ச்சை!!

அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரிய உறுப்பினர் அப்துல் ரஹீம் குரேஷி டெல்லியில் நேற்று தனது புத்தகத்தை வெளியிட்டு பேசினார். மஜ்லீஸ் இ இத்தகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் உவைசி புத்தகத்தை வெளியிட்டார்.
pak ramar
இந்த நிகழ்ச்சியில் அப்துல் ரஹீம் குரேஷி பேசுகையில், ”உண்மையான ராம ஜென்ம பூமி பாகிஸ்தானில் தான் உள்ளது. அயோத்தியில் அல்ல. பிரபல தொல்லியல் துறை ஆய்வாளரான ஜஸ்ஸூ ராம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை இந்த புத்தகத்தில் நான் மீண்டும் வெளியிட்டுள்ளேன். அவரது ஆய்வின்படி அயோத்தியில் ராமன் பிறக்கவில்லை. ராமன் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

இந்திய பிரிவினைக்கு முன்பாக அந்த இடத்தை ராமன் தேரி என்று அழைத்தார்கள். தற்போது அது ரஹ்மான்தேரி என்று அழைக்கப்படுகிறது. எனவே உண்மையான ராம ஜென்ம பூமி தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவில் அமைந்துள்ளது.

அயோத்தியில் நடத்தப்பட்ட 3 தொல்லியல் அகழ்வில் ராமன் பிறந்ததற்கான அடையாளங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாறாக ராமன்தேரியில் அதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” என்றார்.

Related Posts

error: Content is protected !!