ரான்பாக்ஸி மருந்து உற்பத்திக்கு தடை கோரிய வழக்கு!

ரான்பாக்ஸி மருந்து உற்பத்திக்கு தடை கோரிய வழக்கு!

ரான்பாக்ஸி நிறுவனம் தரக்குறைவான மருந்துகளை தயாரிப்பதாகவும், இதுபற்றி ஆய்வு நடத்துவதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்நிறுவன மருந்து தயாரிப்பு பிளான்ட்களுக்கு சீல் வைக்கவேண்டும். மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும்‘ என கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ranbaxy-laboratary
ரான்பாக்ஸி நிறுவனம் தரக் குறைவான மருந்துகளை தயாரிப்பதாகவும், அதனால் மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுபற்றி ஆய்வு நடத்துவதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், ரான்பாக்ஸி நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.ஆனால், மருந்து தயாரிக்க இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.இதற்கிடையே, தங்கள் நிறுவன தயாரிப்புகள் தரமானவை என்றும் பாதுகாப்பானவை என்றும் ரான்பாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் விதிமுறைகளுக்கு உட்பட்டே மருந்து தயாரிப்புகள் உள்ளன என்றும் ரான்பாக்ஸி நிறுவனம் கூறியுள்ளது.

error: Content is protected !!