ராதா மோகனின் ’உப்புக் கருவாடு’ -க்கு சென்சாரில் யூ சர்ட்டிபிகேட்!

ராதா மோகனின் ’உப்புக் கருவாடு’ -க்கு சென்சாரில் யூ சர்ட்டிபிகேட்!

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் ராதாமோகன் தனக்கென ஒரு தனி இடத்தை நிர்ணயித்து கொண்டவர். வித்தியாசமான கதை களம் மூலமாகவும், அந்த படங் களின் வித்தியாசமான தலைப்பு மூலமாகவும் அவருக்கென்று ஒரு பிரத்யேக ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட வர். அவருடைய அடுத்த படமான ‘உப்பு கருவாடு’-ம் இதைத்தான் ஊர்ஜிதம் செய்கிறது. சமீப மாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள கருணாகரன் ஹீரோவாகவும், நந்திதா ஹீரோயினா கவும் நடித்துள்ளனர். மேலும் எம். எஸ்.பாஸ்கர், மயில் சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன் மற்றும் ‘டவுட்’ செந்தில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.


மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரபல கிட்டார் இசைக் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதியிருக்கிறார். கதிர் கலை இயக்கம் செய்திருக்கிறார். ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக் கும் பணியுடன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக் கிறார். வசனத்தை பார்த்திபன் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராதாமோகன்.

ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த ‘உப்பு கருவாடு’ படத்திற்கு இன்றுத் தணிக்கை அதிகாரிகளால் ‘U ‘ சான்றிதழ் பெற தகுதியான படம் என அறிவிக்கப்பட்டது.

”’எல்லா தரப்பினரும் ரசித்து,சிரித்துப் பார்க்க வேண்டிய வகையில் ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்”’எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.

error: Content is protected !!