ராஜு முருகனின் ’குக்கூ’ ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்!

ராஜு முருகனின் ’குக்கூ’ ஸ்பெஷல் பேட்டி + ஆல்பம்!

பார்வையற்ற கேரக்டரை முன்னிறுத்தி தமிழில் ஏற்கெனவே பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அவற்றில் என்றும் நம் நினைவில் அழியாதவையாக கமலின் ‘ராஜபார்வை’, விக்ரமின் ‘காசி’, சூர்யாவுடன் ஜோதிகா நடித்த ‘பேரழகன்’ போன்றவை இருக்கின்றன. அந்த வரிசையில் இரண்டு பார்வையற்றவர்களின் காதல் மொழியை உணர்ச்சி பொங்க சொல்ல விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம். ஆனந்த விகடனில் செய்தியாளராக இணைந்து, பின்னர் அதே இதழில் வெளியான ‘வட்டியும் முதலும்’ தொடர் மூலம் படு பாப்புலரான இளம் கட்டுரையாளரான ராஜு முருகனின் முதல் இயக்கத்தில் தயாராகும் படம்தான் ‘குக்கூ’

படத்தைப் பற்றி ராஜு முருகனிடம் கேட்ட போது,”“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்குள்ள வர்ற காதல் கதைதான். அந்தக் காதல் எப்படி வந்ததுச்சு, என்ன ஆகிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன்.பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உலகமே சத்தங்களால நிறைந்துதான்.அதற்கிடையில் ‘குக்கூ’ ஒரு குயிலோட சத்தம். ஆனால் நீங்கள் அந்த குயிலை அத்தனை சீக்கிரம் மரத்தில் பார்த்து விட முடியாது. அதே சமயம் நாம பாக்க வேண்டும் அப்படி என்பதற்க்காக குயில் சத்தம் கொடுப்பதில்லை. அதுதான் இந்தப் படம். அதாவது நாம பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைப் பாத்திருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்குள் போய் பாத்திருக்க மாட்டோம் இல்லையா?. அதைச் சொல்வதுதான் இந்த ‘குக்கூ’
raju murugan
இந்த கதை நாயகன் பேர் தமிழ். அந்த கேரக்டருக்கு ரொம்ப தெரியாத ஆளா இல்லாம கொஞ்சூண்டு தெரிஞ்சவரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. அதாவது ஒரு நடிகனா இருக்கணும், ஆனா பாத்தா நடிகனா தெரியக் கூடாது. அதான் தினேஷை முடிவு பண்ணினேன். ரொம்ப இயல்பா ‘அட்டகத்தி’ல நடிச்சிருந்தார். அந்த படத்துலயே அவரை பாத்தா ஒரு நடிகனாவே தெரியாது. அந்த கேரக்டரா உள்வாங்கி ரொம்ப சூப்பரா பண்ணிருந்தார். அதனாலதான் அவரை முடிவு பண்ணினேன்.அவரை இப்போ மாத்தணுமே, உடனே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை அணுகி, அவர் கூடவே இரண்டு மாசம் தினேஷை சுத்தச் சொல்லி, அவரோட மெனரிசங்கள் எல்லாத்தையும் உள்வாங்கிக்க சொல்லி முழுக்க மாத்தி கேரக்டரா வாழ வைச்சிருக்கேன்.படத்தோட ஸ்டில்ஸ் பாக்குறீங்களே, அதுல தினேஷ் கண்ணை வேற மாதிரி வச்சுருக்கார் இல்லையா, அதுகூட அவரை பாலோ பண்ணித்தான் வச்சிருக்கார்.இந்தப் படத்துக்கு நாயகி தேர்வுதான் ரொம்ப டைம் எடுத்துடுச்சி. வழக்கு எண் 18/9 படத்தோட மலையாள ரீமேக் பார்த்தேன். மாளவிகா மனசுக்குள் நிறைஞ்சார். அவர்தான் வேண்டும்னு பிடிவாதமாக கேட்டு வாங்கிட்டேன். டிரைலர்லேயே உங்களை இவங்க கவர்ந்திருப்பாங்களே” என்று கேட்டார் இந்த புது இயக்குநர் .

.

error: Content is protected !!