ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ

ரஞ்சிதாவுக்கு தீட்சை அளித்து மா ஆனந்தமாயி ஆக்கிய நித்தி!வீடியோ

நம்மூர் டி வி ஒன்றின் தயவால் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா இன்று முறைப்படி தீட்சை (சன்னியாசம்) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். இதையடுத்து ரஞ்சிதாவாக்கிய தனக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்திருப்பத்துடன் இனி நிரந்தரமாக ஆசிரமத்தில்தான் தங்குவேன் என்றும பழைய ரஞ்சிதா அறிவித்துள்ளார்
ranjitha and nithi
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக சண் டிவியில் ஒரு வீடியோஒளிபரப்பானது.ஆனால்
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. மேலும் இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. இதைத தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டு பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டமெல்லாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நித்யானந்தாவுக்கு இன்று 37வது பிறந்தநாள் விழாவில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா முறைப்படி இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

இப்படி தீட்சை பெற்ற ரஞ்சிதா அங்கிருந்த நிருபர்களிடம் பேசுகையில் “சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். இனி எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

வீடியோ பார்க்க:https://www.youtube.com/watch?v=vgQcXiYcGmk

Actress Ranjitha takes up Sanyas
*******************************************************
Tamil actress Ranjitha who was purportedly seen in the sex video involving Swami Nityananda that created an uproar, has taken Sanyasa Deeksha today itself at Nityananda Ashram situated at Bidadi.

Related Posts

error: Content is protected !!