யுவராஜ்- பிடி பட்டார்? யுவராஜை சுட்டு பிடிக்க உத்தரவு?? -அனல் பறக்கும் ஆன்லைன் செய்திகள்!

யுவராஜ்- பிடி பட்டார்? யுவராஜை சுட்டு பிடிக்க உத்தரவு?? -அனல் பறக்கும் ஆன்லைன் செய்திகள்!

இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜ், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும், அவரின் மறைவிடத்தை போலீஸ் நெருங்கி விட்டதாகவும்,பிடித்தே விட்டதாகவும் தேவைப் பட்டால் அவரை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பலவேறு விதமான செய்திகள் வெளியாகியுள்ளது.
yuvaraj oct 5
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 23ம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 ேபர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி யுவராஜ் (33) கடந்த 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக பதுங்கியிருக் கிறார்.

அதே சமயம் கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து அடிக்கடி யுவராஜ் வாட்ஸ் அப்பில் ஆடியோக் களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு யுவராஜ் பேட்டி அளித்தது ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளுக்கும், கடுப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. உடனடியாக யுவராஜை கைது செய்ய வேண்டும் என காவல்துறை தலைமை யிடத்தில் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு வந்துள்ளது. சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்ட தனிப்படை போலீசாரும் அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். நேற்று இரவு கோவை அருகே ஒரு கிராமத்தில் யுவராஜ் சுற்றிவளைக்கப் பட்டு விட்டதாக கூறப்படுகிறது. யுவராஜ் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவரது வெளி உலக தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இன்று அல்லது நாளைக்குள் யுவராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுவார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே தேவைப்பட்டால் யுவராஜை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘‘காவல் துறையை பொறுத்தவரை யுவராஜ், இன்ஜினியர் கோகுல்ராஜின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த ஒரு கொடூர குற்றவாளி. தலைமறைவாக உள்ள அவர், பீகார் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதே போல் தென் மாவட்டத்தில் பயங்கர கொலைகள் செய்த கூலிப் படையின ரிடமும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். இதனால் தனிப்படை pooலீசார் நெருங்கும் போது, யுவராஜ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே தேவைப்பட்டால் யுவராஜை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான யுவராஜை சுட்டு பிடிப்பதாக வெளியான செய்தி பொய்யானது என்று மாநில குற்ற புலனாய்வு துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக மாநில குற்றபிரிவு கண்காணிப்பாளர் நாகஜோதி செய்தியாலர்களிடம் கூறிய போது, ”ஊடகங்கள் வீண் புரளி கிளப்பிவருவது வருந்தத் தக்கது. பரப்பரப்பான செய்தி வெளியிடவேண்டும் என்பதற்காக காவல் துறை அனுமதியின்றி இது போன்ற செய்திகளை நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சியினர் வெளியிடுவது சரியல்ல. யுவராஜை சுட்டு பிடிக்க போவதாக வெளியான பொய்யான தகவலுக்கும் காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற புரளிகளை மீடியாக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.காவல் துறைக்கும் பொறுமை காக்க ஒரு எல்லை உண்டு” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்

error: Content is protected !!