மோடியின் நூறு நாளில் பத்து அம்ச திட்டம்!

மோடியின் நூறு நாளில் பத்து அம்ச திட்டம்!

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. மேலும் முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
modi--camera
அத்திட்டத்தின் விவரங்கள்:

#1வது அம்சம்: அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது.

#2வது அம்சம்: நாட்டின் பொருளாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது.

#3வது அம்சம்: கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை பணிகளில் கவனம் செலுத்துவது.

#4வது அம்சம்: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது.

#5வது அம்சம்: மக்கள் நலனை இலக்காக கொண்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது.

#6வது அம்சம்: பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது.

#7வது அம்சம்: பணி ஒப்பந்தங்களை வழங்க மின்னணு ஏல முறையை கொண்டு வருவது.

#8வது அம்சம்: தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் புதிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது.

#9வது அம்சம்: அரசின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் செயல்படுத்துவது.

#10வது அம்சம்: நாட்டில் எப்பொழுதும் அமைதியை நிலை நாட்டுவது.

இந்த 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தனது அமைச்சரவை சகாக்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘புதிய பிரதமரின் தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருட்டு. புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன,’ என்றார்.

Related Posts

error: Content is protected !!