மே மாதத்தில் பகல் வெப்ப நிலை 42 டிகிரியைத் தாண்ட போகுதாமில்லே!

மே மாதத்தில் பகல் வெப்ப நிலை 42 டிகிரியைத் தாண்ட போகுதாமில்லே!

சென்னை வானிலை மையத்தின் தலைமை இயக்குநர் எஸ்.பி.தம்பி, கூறும்போது, “சாதாரண வெப்பநிலை யிலிருந்து 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் மாற்றமிருந்தால் அது இயல்பானது என்று கூறலாம் ஆனால் 4 டிகிரி வரை உயர்ந்திருக்கிறது.வறண்ட வானிலை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும். ஏப்ரல் மத்தியில் சென்னைக்கு கடும் வெப்பத்திலிருந்து சற்றே விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. மாலையில் அப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மே மாதத்தில் பகல் வெப்ப நிலை 42 டிகிரி மற்றும் அதற்கு மேலும் செல்ல வாய்ப்புள்ளது” என்றார்.
sun may 23
வேலூர், சேலம், திருச்சி மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதே போல் கோவை, திருத்தணி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் சாதாரண வெப்ப அளவை விட 5 டிகிரி அதிகரித்துள்ளது. மேல் காற்று காரணமாக வறண்ட காற்று வீசுவதால் வெப்ப நிலை அதிகரிக்கிறது. ஆனால் இந்த மாதத்தில் இது வழக்கத் திற்கு மாறாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வானிலை வலைப்பதிவாளர் பிரதீப் ஜான், சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் மார்ச் மாத வெப்ப நிலை கடுமை யாக உயர்ந்து வந்தாலும், முன்பாகவே வெப்ப தரைக்காற்றினால் வெப்ப நிலை இதற்கு முன்னரே 40 டிகிரி செல் சியஸ் வரை உயர்ந்தது என்கிறார்.ஆனாலும் இந்த மாத இறுதிவாக்கில் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள் ளது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். நேற்று (திங்களன்று) சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் மே மாதத்தின் மத்தியில் அடிப்பது போன்ற வெயிலை உணர முடிந்தது.

error: Content is protected !!