மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரின் போக்கைச் சொல்லும் ‘நகர்வலம்’ -ஆல்பம்

மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரின் போக்கைச் சொல்லும்  ‘நகர்வலம்’ -ஆல்பம்

ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுக நாயகி தீக் ஷிதா, பாலா , யோகி பாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தை பற்றி , ” சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல ஏரியாகளுக்கு குடிநீர் விட செல்லுகையில் , ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனை களும் தான்கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைகதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது ” என்றார் .மேலும், இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

error: Content is protected !!