முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமான “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” ஆலபம்

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர்.இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார்.
மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது,”இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் கரு.. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை !சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்புத் தான் “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம். சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது.நாளைய இயக்குனர் சீசன் 2 வில் விருது வாங்கிய நான் இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். இதே தலைப்பில் தான் நாளைய இயக்குனருக்காக குறும்படம் இயக்கி விருது பெற்றேன் என்றார் இயக்குனர்.

error: Content is protected !!