முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி – டாட்டா தகவல்

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி  – டாட்டா தகவல்

டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் இந்த நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களையும் எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும் 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும்.
எனவும் அறிவித்துளளது.
nov 23 - vazhikatti t c l
இது குறித்து இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் நிர்வாக துணை தலைவர் அஜோய் முகர்ஜி.”நடப்பாண்டில் டாடா நிறுவனம் வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப்படுவர்.தற்போது 450 கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மையான 300 கல்வி நிறுவனங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன.

அநேகமாக இது வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும்.இதற்கிடையில் போலி பணி நியமன உத்தரவு கடிதங்களை தவிர்க்கும் வகையில் இம்முறை பணியாளர் தேர்வு நடைமுறை முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது.

சீனாவுடன் ஒப்பிடும் போது நம்நாட்டில் முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனம், ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும் 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும்.

மேலும் தற்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை,2.85 லட்சமாக உள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.”என்று தெரிவித்தார்.

TCS to hire 25,000 via campus placement by February
**************************************************************
The country’s largest software services firm Tata Consultancy Services (TCS) today said it expects to hire 25,000 candidates through campus recruitment by February next year.

error: Content is protected !!