மிசஸ் மோடி தன் செக்யூரிட்டி மீது அதிருப்தி!

மிசஸ் மோடி தன் செக்யூரிட்டி மீது அதிருப்தி!

பிரதமர் மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவருடைய மனைவி யசோத அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மனைவியாக தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? எனபது தொடர்பாக மேஹ்சானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம் அறிந்து தனக்கு தெரியப்படுத்தும்படி மோடியின் மனைவி ஜசோதா பென் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.
modi wife
மேசானா மாவட்டத்தில் உள்ள உஞ்சா என்ற கிராமத்தில், தனது சகோதரருடன் யசோதா பென் தற்போது வசித்து வருகிறார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, யசோதா பென்னுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.அவரது பாதுகாப்புப் பணியில், ஆயுதம் தாங்கிய போலீஸார் உள்பட 10 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு தலா 5 போலீஸார் வீதம், 2 பகுதிகளாக அவர்கள் பணியாற்றி வருகின்றனர்’

தற்போது அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யசோதா பென் அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமரின் மனைவியாக இருந்தபோதும், தான் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதாகவும், ஆனால் தனக்கு பாதுகாப்பு அளித்துவரும் போலீஸாரோ, கார் போன்ற அரசு வாகனங்களில் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள யசோதா பென், அதுபோன்று தனது பாதுகாப்புப் படையினரும் தன்னைக் கொலை செய்யலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொடுத்துள்ள மனுவில்,”தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. போலீசார் அரசு வாகனமான காரில் தான் பயணிக்கிறார்கள். பிரதமரின் மனைவியாக இருந்தாலும் நான் பேருந்து போன்ற பொது போக்குவரத்தையே பயன்படுத்துகிறேன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் தான் கொல்லப்பட்டார். எனவே எனக்கு பாதுகாவலர்கள் மீது ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு போலீசாரும் பணியமர்த்த உத்தரவு நகலை என்னிடம் கண்டிப்பாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.மரபு (புரொட்டோகால்) என்பதற்கு என்ன விளக்கம், அதன்படி எனக்குள்ள உரிமைகள் என்ன, மற்ற பலன்கள் என்ன என்பதையும் அரசு எனக்கு தெரியப்படுத்த வேண்டும். எனது பாதுகாப்பு தொடர்பாக அரசு அளித்துள்ள உத்தரவு என்ன?, பிரதமரின் மனைவிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக அரசியல்சாசனத்தில் கூறப்பட்டுள்ள சட்டம் என்ன?” என்றும் அவர் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம், மேசானா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.ஆர். மேட்டாலியா,”எங்களது அலுவலகத்துக்கு யசோதா பென் திங்கள்கிழமை வந்தார். அப்போது அவர், பிரதமரின் மனைவி என்ற முறையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டு, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அவரது இந்தக் கேள்விக்கு உரிய அவகாசத்துக்குள் பதிலளிப்போம்” என்றார் அவர்.

error: Content is protected !!