மாறன் சகோதரர்கள் மீது விரைவில் எஃப் ஐ ஆர்!

மாறன் சகோதரர்கள் மீது விரைவில் எஃப் ஐ ஆர்!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அட்டர்னி ஜெனரல் கருத்துத் தெரிவித்திருந்தார். அதைப் பரிசீலித்த சிபிஐ இயக்குநர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை, அவரே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

சிவசங்கரனுக்கு நெருக்குதல்: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 முதல் 2014 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. அதில், 2004-2007 காலக்கட்டத்தில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006-ஆம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. ந்த நிலையில், ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியன. அதன்பிறகு, பல்வேறு வட்டங்களில் தொலைத்தொடர்பு சேவையைத் தொடங்க ஏர்செல் நிறுவனத்துக்கு 14 உரிமங்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பிரதிபலனாக, மேக்சிஸ் நிறுவனம் தனது சார்பு நிறுவனங்கள் மூலம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் “சன் டைரக்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்பட்டது. அதன் பிறகு சிவசங்கரன் வெளிநாட்டிலேயே தங்கி விட்டார். இந்த நிலையில், 2008-இல் திமுக தலைவர் கருணாநிதிக்கும், மாறன் கோதரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, வெளிநாட்டில் இருந்து சிவசங்கரன் தில்லி வந்தார். சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று மாறன் சகோதர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகப் புகார் தெரிவித்தார்.
kd_brothers_
நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் முúறைகேடு நடந்ததாக பிரசாந்த் பூஷணும், சுப்பிரமணியன் சுவாமியும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்களாக இருந்தவர்களின் பதவிக் காலத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, சிவசங்கரன் அளித்த புகாரில் “ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதற்கு தயாநிதி மாறனே காரணம்’ என்று கூறியிருந்தார்.

எஃப்ஐஆர் பதிவு: அதைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்த கருத்தில், “ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான முகாந்திரம் உள்ளது’ என்றார். அதன் அடிப்படையில், ஏர்செல் மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Related Posts

error: Content is protected !!