மம்தா ஜெயித்து பின் தோற்றது எப்படி?

மம்தா ஜெயித்து பின் தோற்றது எப்படி?

மேற்கு வங்கத்தில் பாஜகவின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் தேர்தல் களம் கண்ட முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான சுவேந்து அதிகாரிக்கும் இடையே தேர்தல் முடிவுகளில் யார் வென்றது என்ற சர்ச்சை தொடர்ந்து நிலவுகிறது. விரைவில் இச்சர்ச்சையை கோர்ட் விசாரிக்கும்.

மேற்கு வங்கத்தில், பலத்த போராட்டத்துக்குப் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அதன் தலைவர் தோல்வியை தழுவியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இந்த மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. 8 கட்டங்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை நிறைவுப்பெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் மம்தா பேனர்ஜி தனது தொகுதியான நந்திகிராமில் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் ஒவ்வொரு சுற்றாக அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவருமான சுவேந்து அதிகாரி முன்னிலையில் காணப்பட்டார். அதன்பின் மீண்டும் எழுச்சி அடைந்த மம்தா, சுமார் 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கட்சி தற்போது பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை காட்டிலும் கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதாவது மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207க்கு மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

முன்னதாக அவர் சுமார் 2000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சுற்று தொடங்கியதும் அவர் திடீரென தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த முடிவினை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

error: Content is protected !!