மனித கடத்தலுக்காக தண்டனை பெறும் பெண்கள்- ஐ.நா தகவல்!

மனித கடத்தலுக்காக தண்டனை பெறும் பெண்கள்- ஐ.நா தகவல்!

உலகில் மனித கடத்தலில் தண்டனை பெற்றவர்களில் 10க்கு 3 பெண்கள். மேலும் பெண்கள் கொள்ளை மற்றும் முக்கிய குற்றங்களில் மிகப்பேரிய பங்கை வகிப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
kidnab nov 26
ஐ.நா சபையின் போதை பொருள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில்,”2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு மனித கடத்தல் குற்றங்களுக்காக தண்டிக்கபட்டவர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்களாகவோ அல்லது அவர்களை தத்து எடுப்பவர்களாகவோ இருந்து உள்ளனர்.மேலும் தண்டனை பெற்றவர்களில் 10 முதல் 15 சதவீத பெண்கள் தீவிர குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள்.

மனித கடத்தலில் பாதிக்கபடுவது 33 சதவீதம் குழந்தைகள் தான். இதில் 3ல் 2 பங்கு பெண் குழந்தைகள்.2014 மதிப்பீட்டின் படி உலகில் 3.60 கோடி மக்கள் அடிமைகளாக உள்ளனர்.இதில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய வேலை எடுத்தல் ஆகியவையும் அடங்கும். என கூறபட்டு உள்ளது

மனித கடத்தலில் பெண்கள் ஈடுபடும் போது கடத்தபடுபவர்களை மிகவும் நெருக்கமாக கண்காணிக்க முடிகிறது. அவர்களை எளிதில் ஏமாற்றி கடத்த முடிகிறது. என அமைப்பின் தலைவர் கிறிஸ்டினா கங்காஸ்புன்தா கூறினார்.

error: Content is protected !!