மத்திய பிரதேசத்தில் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பாலம் உருவாகிறது

மத்திய பிரதேசத்தில் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பாலம் உருவாகிறது

இந்திய ரயில்வே ஒரு மாபெரும் வலைப்பின்னல்! அவற்றில் ஓடும் ரயில்களே 100 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக பயன்படுகின்றன.ஒவ்வொரு நாளும் சரா சரியாக, 8,350-⁠க்கும் மேற்பட்ட ரயில்கள் கிட்டத்தட்ட 80,000 கிலோமீட்டர் தூர இருப்புப் பாதைகளில் 1.25 கோடிக் கும் அதிக பயணிகளை சுமந்து செல்கின்றன. சரக்கு ரயில்கள் பதிமூன்று லட்சம் டன்னுக்கும் அதிக எடையுள்ள சரக்குகளை இழுத்துச் செல்கின்றன.
railway feb 22
சரக்கு ரயில்களும் பயணி ரயில்களும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பயணிக்கும் தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட மூன்றரை மடங்கு அதிகம்!அதிலும் கிட்டத்தட்ட 6,867 ரயில் நிலையங்கள், 7,500 ரயில்கள், பயணிகளையும் சரக்குகளையும் சுமக்கும் 2,80,000 ரயில் பெட்டிகள், பக்கப் பாதைகள்,பாலங்கள் உட்பட மொத்தம் 1,07,969 கிலோமீட்டர் நீளமுடைய இருப்புப் பாதைகள்

இந்நிலையில் இந்தியாவில் தற்போது நீளமான ரயில்வே பாலமாக இருந்து வருவது கேரளாவின் வேம்பநாடு ரயில் பாலமாகும். எடபள்ளி மற்றும் வல்லார்பாடத்தை இணைக்கும் இந்த பாலம் 4.62 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டதாகும். ஆனால், மத்திய பிரதேசத் தில் இந்தியாவிலேயே மிக நீளமான ரயில் பாலம் ஒன்று கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அங்குள்ள காத்னி மாவட்டத்தில் உருவாகும் இந்த பாலத்திற்கு ‘கிரேட் செப்பரேட்டர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டவுண் லைனில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அப் லைனில் 14 கிலோ மீட்டர் நீளத்திலும், ஒட்டுமொத்தமாக 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலத்தை கட்டி முடிக்க குறைந்தது 5 ஆண்டுகளா வது ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.600 கோடி செலவில் உருவாகும் இந்த பாலத்தால் காத்னி ஜங்ஷன் வழியாக செல்லும் ரயில்கள் இனி 2-4 மணிநேரம் நின்று செல்ல வேண்டியதில்லை. நேரடியாகவே பினாவுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts

error: Content is protected !!