மத்திய அரசின் மான்யத்துடன் ஜன் ஔஷதி மருந்து கடைகள் நீங்களும் ஆரம்பிக்கலாம்!

மத்திய அரசின் மான்யத்துடன் ஜன் ஔஷதி மருந்து கடைகள் நீங்களும் ஆரம்பிக்கலாம்!

மனிதனுக்கு உணவு, உடை, உறையுள் மட்டுமே வாழ அத்தியாவசியமாக இருந்தது. ஆனால் இப்போது மருந்துகளும் அதில் சேர்ந்து விட்டது. ஏழை , நடுத்தர மக்களுக்கு மருந்து செலவு என்பது கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இன்று மருந்துகளின் விலை உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் பல உயிர்கள் போயிருக்கிறது, சிலர் சூழ்நிலை திருடர்களாக மாறி உள்ளார்கள். இதைத்தடுக்க தான் பிரதமர் மோடி ஏழை மக்களின் மருந்தகங்கள் திட்டத்தை (PMBJP) பெரிய அளவில் மக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு சென்றார்.

ஆம்.. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் கடைசி வாரத்திலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அப்போது, முக்கிய அத்தியாவசியப் பொருட் களான மருந்துகளும் மாத்திரைகளும் நாட்டு மக்களுக்குக் கிடைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் Pradhan Mantri Bharatiya Janaushadhi Kendras (PMBJK). மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 726 மாவட்டங்களில் 6,300 மருந்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் மருந்தகங்கள் மூலம் 700க்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த மருந்தகங்கள் மூலம் சுமார் ரூ.52 கோடிக்கு மருந்துகளும் மாத்திரைகளும் விற்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன & உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான மருந்தகங்கள், வாட்ஸ்ஆப் மற்றும் இமெயில் மூலமாகவும் ஆர்டர்களைப் பெற்று மருந்துகளை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

மருந்துகளையும் மாத்திரைகளையும் நாட்டின் கடைக்கோடி மக்களும் விரைவில் பெறுவதற்காக இந்தியத் தபால்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் சதானந்த கவுடா தெரிவித்தார்.

இந்த மக்கள் மருந்தகங்கள் மூலம் 700க்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த மருந்தகங்கள் மூலம் சுமார் ரூ.52 கோடிக்கு மருந்துகளும் மாத்திரைகளும் விற்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன & உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான மருந்தகங்கள், வாட்ஸ்ஆப் மற்றும் இமெயில் மூலமாகவும் ஆர்டர்களைப் பெற்று மருந்துகளை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

மருந்துகளையும் மாத்திரைகளையும் நாட்டின் கடைக்கோடி மக்களும் விரைவில் பெறுவதற்காக இந்தியத் தபால்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் சதானந்த கவுடா தெரிவித்தார்.

இதனிடையே இது போன்ற ஜன் ஔஷதி மருந்து கடைகள் நீங்களும் ஆரம்பிக்கலாம்.

ஒரு சராசரி மனிதனாக நீங்களே ஒரு ஜன் ஔஷதி மருந்து கடை ஆரம்பிக்க முடியும். உங்கள் சுய தொழிலாக இதை செய்து நீங்களும் சிறு வருமானம் ஈட்ட முடியும். அப்படி ஆரம்பிக்க என்ன தேவை?

உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு கடை , அல்லது லீஸ் முறையில் ஒப்பந்தம் செய்ய பட்ட ஒரு கடை .

கடையின் அளவு குறைந்தது 120 சதுர அடிகள் இருக்க வேண்டும்.

கணினி அறிவுடன் கூடிய மருந்தாளுனர் ஒருவர் வேலையில் சேர்த்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கபட வேண்டும்.

ஆரம்பிப்பவர் SC / ST பிரிவை சேர்ந்தவர் அல்லது மாற்று திறனாளியாக இருந்தால் அதற்கான

ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

முதலில் இந்த கடையை நீங்கள் ஆரம்பிக்க மத்திய அரசு 2.5 லட்சம் வரை கடன் உதவி வழங்கும்.

விற்கும் மருந்துகளுக்கு MRP இல் இருந்து (வரி இல்லாமல்) 20% உங்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற கீழ் கண்ட இணைய முகவரிக்கு செல்லுங்கள்.

http://janaushadhi.gov.in/pmjy.aspx

Related Posts

error: Content is protected !!