மத்திய அரசின் பட்ஜெட் -2015! மினி கிளான்ஸ்!

மத்திய அரசின் பட்ஜெட் -2015! மினி கிளான்ஸ்!

நாட்டு மக்களின் பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். மோடி அரசின் முழுமையான முதல் பட்ஜெட் என்பதால் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு திட்டங்கள், வருமானவரி உச்ச வரம்பு உயர்வு உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மானியங்கள் குறைப்பு, சரக்கு மற்றும் சேவை குறித்து அருண் ஜெட்லி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவித்தன.அத்தனையும் பொய்த்து போனதுதான் மிச்சம்
budger 28
இனி ஜெட்லி பட்ஜெட்டின் அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்.

* மருத்துவ காப்பீடு பிரீமியம் வரிச் சலுகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு.

* மருத்துவ காப்பீட்டிற்கான வரிவிலக்கு ரூ.25,000 ஆக உயர்வு.

* 50 லட்சம் கழிப்றைகள் கட்டபட்டு உள்ளன. 6 கோடி கழிப்பறைகள் கட்டுவது இலக்காகும்.

* நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம். பணவீக்கம் இந்த ஆண்டு இறுதியில் 5%க்குள் இருக்கும்

* கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.

* தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை

* சிறுபாசன திட்டங்களுக்கு ரூ5,300 கோடி நிதி ஒதுக்கப்படும்

* ஒரு லட்சம் கி.மீ. நீளத்துக்கு சாலைகள் அமைக்கப்படும்

* குறுந்தொழில் முனைவோருக்கு ரூ20 ஆயிரம் கோடி முதலீட்டில் முந்த்ரா வங்கிகள் அமைக்கப்படும்

* பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் நடைமுறை தொடரும்

* சரக்குகள்- சேவை வரி திட்டமான ஜிஎஸ்டி, 2016 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்

* மானியங்கள் ஏழைகளை மட்டுமே சென்றடைய அனைவரும் உதவ வேண்டும்.

* சமையல் எரிவாயு மானியம் பெறுவதை எம்.பி.க்கள் கைவிட வேண்டும்.

* அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.

* தங்க நாணய பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

* மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

* 2020 ஆம் ஆண்டிற்குள் மீதம் உள்ள 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி

* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.

* நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

* 2022 க்குள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு

அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

error: Content is protected !!