மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் !

மஞ்சள் நீராட்டு விழா! – கம்ப்ளீட் டீடெயில் + குறும்பட ஆல்பம் !

மஞ்சள் நீராட்டு எனப்படும் பூப்புனித நீராட்டுவிழா என்பது, பெண் பால் முதிர்ச்சி அடைந்து முதல் மாதப் போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப் போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்து வரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங் களில் நடத்தப் படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்கு களும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன. பெரும்பாலும் இந்துக் களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுப் போக்கான சில கூறுகளாகும். இடத்துக்கிடம் இக்கூறுகள் மாற்றம் காணலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம்.


தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப் படுத்தினர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதி னாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந் துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்ப தாவது நாள் புரோ கிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப் படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ் நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.

புனிதச் சடங்கு

பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர் களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு. பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப் படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடு களைத் தொடக்கு கிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.


இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப் படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற் கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப் பழம் வைக்கப் பட்டு நடுவில் பூப்படைந்த  பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப் படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.

குடும்பச் சடங்கு

புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய் மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டு கின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப் படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக் குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

இப்படியான மஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் உள்ளது. ஆனால் இந்த விழாவின் முக்கியத்துவம் நாகரீக வாழ்க்கையில் வளர்ந்து வரும் இன்றைய சிறுமிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கியிருக்கிறார் கள்.கல்வி அறிவில்லாத அன்னை, அனுபவமிகுந்த பாட்டி என கதாபாத்திரங் களை கவனமாக தேர்வு செய்து 35 நிமிட குறும்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். நமது கலாச்சாரமான கோலமிடுவது அதற்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் அழகாக சுட்டிகாட்டியிருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் சிறுமியாக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.


இந்த குறும்படம் சர்வதேச விழாவில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அரசாங்கத் தினால் நடத்தப்படும் சர்வதேச குழந்தை திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்காக தங்க யானை விருது பெற்றிருக்கிறது. உலக முழுவதும் உள்ள 56 குறும்படம் இவ்விழாவில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!