February 7, 2023

மகிழ்ச்சியின் விலை என்ன? புதிய ஆய்வு முடிவுகள்!

மகிழ்ச்சி..

இந்த ஐந்தெழுத்து சொல்லுக்குதான் எவ்வளவு மகிமை. மனித ஜீவராசிகள் ஒவ்வொருவருக்கும் பிடித்த அல்லது ஆசைப்படும் வார்த்தைதான் இந்த மகிழ்ச்சி.

ஆம்.. நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைவிட, சிறந்த உந்துசக்தி இல்லை’ என்கிறார்கள் தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள். நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே, நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆகையால், மகிழ்ச்சி தராத பழக்கவழக்கத்தையும் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால், அதுவே ஒரு மகிழ்ச்சிதானே.

நம் மனதை மகிழ்ச்சிப்படுத்துவது எப்படி? என்பதை விட கிடைத்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வது எப்படி என அடித்தட்டு ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை எல்லா பொருளாதார அடுக்கில் உள்ள மனிதர்களிடமும் புதைந்திருக்கும் தேடல் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரணி எனில், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் புத்தர் தேடியதற்கான காரணம் என்ன? இன்று கூட பொருளாதாரம் சார்ந்த வசதிகளில் பெரும் நிறைவு கொண்ட நோய்வாய்ப்பட்டவர்களிடமும், முதியோர் இல்லத்திலுள்ளவர்களிடமும் ‘உங்களிடம் மகிழ்ச்சி உள்ளதா? என்று கேட்டால், ‘இல்லை’ என எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள். எனவே மகிழ்ச்சிக்கு பொருளாதாரமும் பணமும் அவசியமல்ல. அப்படி இருக்க எதுதான் மகிழ்ச்சி, எப்படித்தான் அதை தக்கவைத்து கொள்வது என்ற தேடல் இன்றுவரை இருந்துவருகிறது.

ஆனாலும் வெறும் பணம் மட்டும் மகிழ்ச்சியை தருமா? என்ற பழைய கேள்வி ஒன்றிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் பதிலை கண்டுபிடித்துள்ளனர்.தோராயமாக, உங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிந்தால், அதற்கு எவ்வளவு செலவாகும்? 2010 பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் உட்ரோ வில்சன் பள்ளியின் ஆய்வில் இதற்கான பதில் தெரிய வந்துள்ளது. ஒருவரின் மகிழ்ச்சிக்கு, ஆண்டுக்கு சுமார் 75,000 டாலர் வரை செலவாகும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. (இன்றோ இது ரூ. 54 லட்சத்திற்கு மேல்). ஒரு நபரின் வருடாந்திர வருமானமானது மேலே குறிப்பிடப்பட்ட அளவுகோலுக்கும் கீழே உள்ளதை அவர் கண்டறிந்துள்ளார் (மகிழ்ச்சிக்கு மேற்சொன்ன மதிப்பு மிகவும் குறைவு).

ஆனால், $75,000 க்கும் அதிகமான மக்கள் சம்பாதித்தாலும், அவர்கள் தாங்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறவில்லை. இந்த ஆய்வை 2010 ஆம் ஆண்டு பொருளாதாரத் திற்கான நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அங்கஸ் டீட்டன் மற்றும் உளவியலாளர் டேனியல் கான்மேன் ஆகியோர் நடத்தினர்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கேலப் மற்றும் ஹெல்த்வேஸால் வாக்களிக்கப்பட்ட 450,000 அமெரிக்கர்களின் பதில்களை அவர்கள் அனலைஸ் செய்தனர். பங்கேற்பாளர்களிடம் முந்தைய நாளில் அவர்கள் எப்படி உணர்ந்தார்கள், அவர்களுக்கான சிறந்த வாழ்க்கையை தான் அவர்கள் வாழ்கிறீர்களா, என்று கேட்கப்பட்டது.

ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில் – ஒரு புதிய ஆய்வு இது ‘மகிழ்ச்சியான’ மதிப்பீடுகளை விட மிகக் குறைவு என்று கூறுகிறது. ‘சிறந்த நல்வாழ்வுக்கு ஆண்டுக்கு, வருமானம் $75,000 க்கு மேல் இருக்கும்’ என்று புதிய ஆய்வும் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் இது வெளியிடப்பட்டது, “75,000/y க்கு மேல் ஒருவர் சம்பாதித்தால் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.

இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதைத்தான் கூறுகின்றது. புதிய ஆய்வு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் ஃபார் பிசினஸின் சீனியர் பெல்லோ, மாட் கில்லிங்ஸ்வொர்த்தியால் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஆய்வு அமெரிக்காவில் வேலை செய்யும் 33,391 வளர்ந்த பெரியவர்களிடமிருந்து 17,25,994 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் வடிவமைத்த ஆப்ஸை பயன்படுத்தி மாதிரிகளை சேகரித்தார்.”இது எப்படி செயல்படுகிறது என்றால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளும்போது சீரற்ற தருணங்களில் வித்தியாசமான உணர்வை பெறுகிறார்கள்,” என்று கில்லிங்ஸ்வொர்த் VICEஸிடம் கூறினார். “அந்த தருணத்திற்கு சற்று முன்பு, நான் அவர்களின் அனுபவத்தைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டேன், அவர்கள் எப்படி உணர்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், மற்றும் பலவிதமான விஷயங்களை பற்றியும் கேட்டேன்.” அப்படியான அவரது ஆய்வின் முடிவுகள், “பெரிய வருமானம் சிறந்த அனுபவம் வாய்ந்த நல்வாழ்வு மற்றும் அதிக மதிப்பீட்டு நல்வாழ்வு ஆகியவற்றுடன் வலுவாக தொடர்புடையது.

மேலும், பதிவு (வருமானம்) மற்றும் அனுபவம் வாய்ந்த நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான உறவின் வடிவம் மிகவும் நேர்கோட்டுடன் இருந்தது. அங்கே அனுபவம் வாய்ந்த நல்வாழ்வில் ஏற்றத்தாழ்வு காணப்படவில்லை என்றும் அனுபவம் வாய்ந்த நல்வாழ்வின் சரிவில் வெளிப்படையான மாற்றம் எதுவும் இல்லை ” என்றும் கூறினார். புதிய ஆய்வு ஒரு சரியான எண்ணிக்கையை மக்கள் முன் வழங்கவில்லை என்றாலும் – இது பழைய கேள்வியை எழுப்புகிறது, மில்லியனர்கள் கிரகத்தின் தற்போதைய பணக்காரர் போன்றவர்கள், நம்மில், எலோன் மஸ்க் ( Elon Musk ) மற்றவர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுகிறது.

சோகங்களை அழித்தால்தான் மகிழ்ச்சி பிறக்கும் என்று பிறர் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர் சார்லி சாப்ளின். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் மக்களை நோக்கி ஒரு ஜோக் ஒன்றை சொன்னார். அரங்கமே சிரித்து அதிர்ந்தது. திரும்பவும் அதே ஜோக்கை இரண்டாம் முறை சொன்னார், பாதி பேர் சிரித்தனர். மூன்றாவது முறையும் அதே ஜோக்கை சொன்னார். அரங்கம் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் சாப்ளின் மக்களை நோக்கி சொன்னார், ”ஒரு சிறிய ஜோக் முதலில் உங்களை சிரிக்க வைத்தது. அடுத்த இரண்டு முறையும் ஏற்கனவே சொன்னதுதானே என்று பெரிதாய் ஏற்றுக்கொண்டு சிரிக்கவில்லை. அப்படியிருக்க சோகம் ஒன்றுதானே? அதைமட்டும் ஏன் திரும்பத் திரும்ப ஏற்றுக்கொள்கிறீர்கள்? சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள்” என்றார். உண்மையிலேயே மகிழ்ச்சியின் வாசல் சிரிப்புதான்.

இன்று மகிழ்ச்சியை அறிவியல் முறையில் கொண்டுவர லாஃபிங் தெரபி முதல் யோகா வரை எல்லாவற்றையும் அலசுகிறோம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என கண்ணாடி அறையில் கூட்டமாக நின்று சிரித்துக்கொண்டிருக்கிறோம். சிரிப்பு எனும் உணர்வுதான் மகிழ்ச்சியின் வாசல். ஆனால் இயற்கையை என்றுமே மிஞ்சாது செயற்கை என்றாலும் சிரிப்ப்போ.. மகிழ்ச்சியாக இருப்போம்

அகஸ்தீஸ்வரன்.