ப்லான வெப்சைட்களை முடக்க வழியில்லையா? சுப்ரீம் கோர்ட் கிடுக்குபிடி

ப்லான வெப்சைட்களை முடக்க வழியில்லையா? சுப்ரீம் கோர்ட்  கிடுக்குபிடி

இணையத்தில் ‘சைல்ட் போர்னோ’ எனப்படும் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆபாசத் தளங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை, மூன்று வாரங்களுக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும் எனறு தொலைதொடர்பு துறைக்கும
மேலும், இணையத்தில் சிறார் பாலியல் வக்கிர வீடியோக்கள் உள்ளிட்ட ஆபாசத் தளங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என மத்திய அரசுக்கும சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
nov 19 - child porno
முன்னதாக ஆபாச வெப்சைட்களை முடக்க கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கமலஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் “பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் 20 கோடி ஆபாச வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆபாச படங்களை சிறுவர்களும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும் அபாயம் உள்ளது. ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் தூண்டுதலால்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.

சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமை மிகவும் கவலையளிக்கிறது.டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்கார கொலை செய்யப்பட்டார். இது போன்ற குற்றங்களை தூண்டுவது ஆபாச படங்கள்தான். ஆபாச பட பிரச்னையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள சட்ட பிரிவுகள் போதுமானதாக இல்லை. ஆபாச படம் பார்ப்பது அதை மற்றவருக்கு அனுப்புவது போன்றவற்றை ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக மாற்ற வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையின்போது சர்வதேச ஆபாச தளங்களை முடக்குவது மிகவும் கடினமான காரியம் என்றும், அதுகுறித்து பல்வேறு துறைகளுடன் ஆலோசித்துத் தீர்வு காண கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.பின்னர் இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தர்ப்பில் ஆஜரான கே.வி.விஸ்வநாதன், இவ்விவகாரத்தில் விளக்கம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் செய்ய வேண்டும் என்றார். ஆனால், அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். உடனடியாக விளக்கமளிக்குமாறும் வலியுறுத்தினார்.சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பிரச்சினையை மிகவும் முக்கியமானதாகக் கருத்துவதாக் கூறியதுடன் ‘இப்பிரச்னை தொலை தொடர்பு துறை, ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருவதால், ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகள், குறிப்பாக குழந்தை ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகளை பற்றி அந்த துறை 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டது.

Supreme Court seeks ways to block child porn sites
*******************************************************************
The Supreme Court on Monday issued a notice to the Department of Telecommunication (DoT) seeking its response as to how to block websites with pornographic content in the country, particularly those featuring child pornography.

Related Posts

error: Content is protected !!