போப் பிரான்சிஸ் ரோம் மருத்துவமனையில் அனுமதி!

போப் பிரான்சிஸ்  ரோம் மருத்துவமனையில் அனுமதி!

த்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

86 வயதான போப் பிரான்சிஸ், முழங்கால் வலியால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. எனினும், சுறுசுறுப்புடன் தேவாலய பணிகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்த போப் பிரான்சிஸ், சில தினங்களாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனையில், நுரையீரல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும், கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்ச்சிகள் வரும் நிலையில், அவற்றில் பிரான்ஸிஸ் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், ஏப்ரல் இறுதியில் ஹங்கேரி செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது. போப் பிரான்சிஸ் விரைந்து நலம்பெற மக்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!