பேஸ் புக் மூலம் தன்னை விற்கும் குஜராத் மாடல் அழகி!

பேஸ் புக் மூலம் தன்னை விற்கும் குஜராத் மாடல் அழகி!

சமீபகாலமாக பேஸ்புக் மூலம் தாய்ப்பால், சிறுநீரகம், கருமுட்டை, மற்றும் நீண்ட தலைமுடி (உரோமம்), போன்றவற்றை விற்பது அதிகரித்து வருவது தெரிந்த விஷயம்தான்.மேலும் வெளிநாடுகளில் தங்களது கன்னித்தன்மையை இளம் பெண்கள் ஆன் லைன் ஏலம் விடுவார்கள் எனபதும் அறிந்த தகவல்தான்.ஆனால் நம் பிரதமர் மோடி சொந்தத் தொகுதியான குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணோ தன்னை விற்க பேஸ் புக் மூலம் விளம்பரம் செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
facebook girl sale
குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக உள்ளார். வறுமையில் வாடும் சாந்தினியால் பெற்றோரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர் தனது உடல் விற்பனைக்கு என்று பேஸ்புக்கில் துணிச்சலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாந்தினி கூறுகையில், என் பெற்றோரை காப்பாற்ற பணம் இல்லை. உதவி கேட்கவும் ஆள் இல்லை. பிறகு நான் என்ன செய்ய முடியும். இந்த அறிவிப்பை பார்த்து பலர் என்னை தொடர்பு கொண்டார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிர உதவ யாரும் முன் வரவில்லை என்றார்.

சாந்தினி பற்றி குஜராத் மாநில பெண்கள் ஆணைய தலைவர் லீலாபென் அன்கோலியா கூறுகையில், குஜராத்தில் உள்ள பொது மருத்துவமனைகளில் அவரது பெற்றோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. சாந்தினிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர் எங்களை அணுகலாம் என்று கூறினார்.

error: Content is protected !!