பேஸ் புக்கில் மோடி பற்றி அவதூறு!-கொல்லம் வாலிபர் கைது!

பேஸ் புக்கில் மோடி பற்றி அவதூறு!-கொல்லம் வாலிபர் கைது!

பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்ட 5 நாட்களுக்குள் 17 லட்சம் லைக்களை பெற்று சாதனை படைத்திருந்தது. அதிலும் முதல்நாள் 10 லட்சமாக இருந்த லைக் நிலவரம் ஒரே நாளில் 7 லட்சம் அதிகரித்து இருந்த நிலையில் பேஸ் புக் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, கேரள மாநிலம் அல்லாஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் அவதூறான கருத்தினை வெளியிட்டதாக தெரிகிறது. இதுபற்றி கொல்லத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் போலீசில் புகார் செய்தனர்.அந்தப் புகாரின்பேரில் ராஜேஷ் மீது கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு அவரை பிடித்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று அவரை கைது செய்தனர்.
modi_facebook_
உலகில் பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகம் உள்ள இந்திய நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி, 18 மில்லியன் பேஸ்புக் நண்பர்களுடன் பிரபலமானவராகத் திகழ்கிறார். அவரது அமைச்சரவை சகாக்களையும் பேஸ்புக்,, டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களை பயன்படுத்த அவர் அறிவுறுத்தி வருகிறார் என்று பேஸ்புக் சிஓஓ அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் கூறியிருந்த நிலையில்
மோடி குறித்து, கேரள மாநிலம் அல்லாஞ்சேரியை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் அவதூறான கருத்தினை வெளியிட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.அவர் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் துணை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

மோடி பிரதமர் பதவி ஏற்ற பின்னர் அவர் மீது கேரளாவில் அவதூறு கருத்து வெளியிடப்பட்டிருப்பது இது 3&வது தடவை ஆகும்.கடந்த ஜூன் மாதம் மோடி பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட 2 சம்பவங்கள் நடந்தன. அவற்றில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 9 பேரும், திருச்சூர் அருகேயுள்ள குழுர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றின் முதல்வரும், மாணவர்களும் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Posts

error: Content is protected !!