பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல்

பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல்

தற்பொதைய உல்கின் டாப் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தி சமீப காலமாக பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டு பிடித்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் பணியிடத்து நண்பர்களின் தொடர்பை அறவே துண்டித்து உள்ளதாகக் தெரிவித்து உள்ளனர்.
facebook dislike
உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி நேரங்களை பேஸ்புக்கில்தான் கழிக்கிறார்கள். அத்துனை தூரம் ஃபேஸ்புக் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளது.விளைவு, ஃபேஸ்புக் பற்றிய செய்திகள் நாளேடுகளை ஆக்கிரமித்துள்ளன.அத்தகைய செய்திகளுள் சில நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும் சில செய்திகள் அதிச்சியுட்டுகின்றதை நம்பிதான் ஆக வேண்டும். ஆம்.. ஃபேஸ்புக்கில் நட்புடன் இருப்பவர்களில் பெரும்பாலானோர் திடீரென நட்பை துண்டித்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது என்பதை ஒரு ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, ஆய்வு நடத்திய, கிறிஸ்டபர் சிபோனா கூறுகையில், ”மதம் அல்லது அரசியல் சம்பந்தமான தேவையில்லாத கருத்துகளை, பேஸ்புக் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வதை விரும்பாதவர்கள், அத்தகைய நண்பர்களுடனான தொடர்புகளை, துண்டித்து கொள்கின்றனர்,” என்றார்.

error: Content is protected !!