பேஸ்புக் ட்விட்டரில் 73% இந்திய மைனர்கள்! அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி!

பேஸ்புக் ட்விட்டரில் 73% இந்திய மைனர்கள்! அசோசேம் ஆய்வில் அதிர்ச்சி!

கடந்த ஆண்டே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில், “சிறார்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது.10க்கு 8 குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம், பாராட்டு போன்றவற்றை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள இயலாத நிலையில் ஏங்கி தவிக்கின்றனர். இதுபோல பாதிக்கப்படும் குழந்தைகளில் பலர் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களை பார்க்கின்றனர் எனவும் அதுவும் இப்போது பெரும்பாலான சிறுவர்கள் தங்களது பெற்றோரின் உதவியுடன் இத்தகைய சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி இராப் பகலாக மேய்வதாக அசோசேம் சர்வே கூறியுள்ளது.
kids-internet-facebook. cartoon
இதற்கு முன்னர் 600 மாணவர்களிடம் நடத்திய மற்றோருசர்வேயில் 96 சதவீத மாணவர்கள்(மைனர்கள் தங்கள் வயதை அதிகரித்துக் காட்டி) பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியுள்ளனர். தங்களது உணர்வுகள், மகிழ்ச்சிகளை முகம் தெரியாத யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போதுதான் சில தவறான நபர்களின் சேர்க்கையில் மாணவ பருவத்திலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.இதில் 72 சதவீத பெற்றோருக்கு தங்களது குழந்தைகள் இது போல சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர் என்பதே தெரியாமல் உள்ளனர். அவர்கள் குறித்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கின்றனர்.80 சதவீத குழந்தைகள் பெற்றோருடன் வெளியில் செல்வதை விட சாட்டிங் செய்வதையே விரும்புகின்றனர். 72 சதவீதம் பேர் தங்களது நண்பர்களுடனும், 78 சதவீதம் பேர் புதியவர்களுடனும் சாட்டிங் செய்வதை விரும்புகின்றனர்.குழந்தைகளில் 87 சதவீதம் பேர், சமூக வலைதளங்களில் தங்களது உணர்வுகளை கொட்டுவதோடு தங்களது குடும்பம், பிரச்னைகள் குறித்தும் தெரிவித்து விடுகின்றனர்.

இது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.55 சதவீத குழந்தைகள் சமூக வலைதளங்களில் போலியான பெயர்களில் கணக்கு ஆரம்பித்து, சாட்டிங் செய்வது, இணைய தள பதிவிறக்கம் செய்வது என்று உள்ளனர். இதில் சில நேரங்களில் வகுப்பறையில் ஏற்படும் சிறிய கோபத்தின் போது கூட, கொலை செய்யும் அளவுக்கு இணைய தளங்களில் தகவல்களை சேகரிக்கின்றனர்..” என்றெல்லாம் அப்போது தெரிவித்திருந்த விஷயமே எதிர்பார்த்த சர்ச்சையைக் கிளப்பவில்லை என்றாலும் தற்போது பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் 73% இந்திய சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் துணையுடன் கணக்கு வைத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
kids-internet-facebook
சமீபத்தில் சென்னைன்னை, மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள 4,200 பெற்றோர்களிடமும், 11, 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடமும் நடத்தப்பட்ட இந்த சர்வே குறித்து அசோசேம் வெளியிட்ட அறிக்கையில், “8 முதல் 13 வயது வரை உள்ள 73% இந்தியச் சிறார்கள் தங்களது பெற்றோருக்கு தெரிந்தே சமூக வலைத்தளங்களில் கணக்கு துவங்குகிறார்கள். பொய்யான வயதை குறிப்பிட்டு தங்கள் குழந்தைகள், சமூக வலைதளங்களில் வலம் வருவதை 82 சதவீதம் பெற்றோர்கள் அனுமதிக்கின்றனர் அதிலும் இந்த ஆய்வில் மற்றோரு உண்மையும் தெரியவந்துள்ளது. அதாவது, வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகள் மிக அதிகமான அளவில் இது போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகின்றனர்.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது

இது குறித்து அசோசேம் பொது செயலாளர் டி.எஸ்.ராவத் கூறுகையில், “சமூக வலைத்தளங்களில் இருக்கும் தகவல்கள், மக்கள், சூழ்நிலை ஆகிய அனைத்தும் சிறுவர்களை தவறான பாதைக்கு கொண்டுச் செல்ல வாய்ப்புள்ளது” என்று எச்சரித்தார்.

error: Content is protected !!