பேஸ்புக்கில் போலி விளம்பரம்!

பேஸ்புக்கில் போலி விளம்பரம்!

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இணையதள புரட்சி காரணமாக, ஆன்லைன் சில்லறை வர்த்தகம் அமோக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, ஆன்லைன் சில்லறை விற்பனையின் மொத்த மதிப்பு ரூ.21,000 கோடி என்ற அளவில் உள்ளது. இது 2018-க்குள் நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆன்லைனில் ஏராளமானோர் பொருள்களை வாங்க தொடங்கியுள்ளனர். எளிதான பரிவர்த்தனை, நேரம் மற்றும் எரிபொருள் மிச்சம் போன்ற சாதகமான அம்சங்கள் ஆன்லைன் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளன என ஆர்.என்.சி.ஓ.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது. தவிர, ஆன்லைனில் பொருள்களுக்கு அதிக அளவு தள்ளுபடி வழங்கப்படுவதும் வளர்ச்சிக்கு வலுச்சேர்க்கிறது என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இன்றைய நிலையில் ஆன்லைன் மூலம் எலக்ட்ரானிக் பொருள்கள் அதிகம் விற்பனை ஆகின்றன. அடுத்தபடியாக ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு சில தடைக்கற்களும் உள்ளன. கிராமப்புறங்களில் போதிய அளவு இன்டர்நெட் வசதியின்மை, பல வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்த சந்தேகங்கள், பாதுகாப்பு குறித்த பயம் ஆகியவை இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன.
facebook ad nov 16
இதையும் மீறி ஆன்லைன் மூலமாக விற்பனை விறுவிறுப்படைந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்தவகையில் பேஸ்புக்கில் ரேபன் குளிர்கண்ணாடி உட்பட விலை உயர்ந்த தயாரிப்புகள், ஆடம்பர பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படுகின்றன. உதாரணமாக ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள பொருள் ரூ.15 ஆயிரத்துக்கும், ரூ.10,000 மதிப்புள்ள ரேபன் குளிர்கண்ணாடி ரூ.1,800க்கும் விற்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இத்தாலியை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் 2 பேர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இத்தகைய விவிளம்பரங்களில் பெ ரும்பாலானவை போலி எனவும், சீனாவில் பதிவு பெற்ற போலி ஆன்லைன் நிறுவனங்கள் இந்த விளம்பரங்களை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!