பேஸ்புக்கில் ‘சே தேங்க்ஸ்’ + பிரைவசி போன்ற புதிய வசதி வந்தாச்சி!

பேஸ்புக்கில் ‘சே தேங்க்ஸ்’ + பிரைவசி போன்ற புதிய வசதி வந்தாச்சி!

இன்றைய பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’செல்போன்’, எதிர்முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தும் பேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லக் கூடிய வசதியைக் கொடுத்துள்ளார்கள். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
facebook nov 15
தற்போது சகலரும் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ள பேஸ்புக் இந்த நட்பை கொண்டாட உதவும் புதிய வழிகளை உருவாக்கித்தர முயன்று வருவதாகவு குறிப்பிட்டுள்ளது. இப்படி உருவாகி இருக்கும் சமீபத்திய வசதி தான் சே தேங்ஸ்.

இதன் மூலம் நண்பர்களுக்கோ சக ஊழியருக்கோ பேஸ்புக் மூலம் ஒரு தேங்யூ வீடியோவை அனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கலாம். ஒருவர் முக்கியமாக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இந்த வீடியோவை உருவாக்கி அனுப்பலாம். இந்த வீடியோவை எப்படி உருவாக்க, facebook.com/thanks பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நன்றி சொல்ல உள்ள பேஸ்புக் நண்பரை தேர்வு செய்தால் உடனே பேஸ்புக்கே உங்கள் டைம்லைனில் இருந்து ஒரு வீடியோவை உருவாக்கித்தரும். அந்த வீடியோவில் உங்கள் நட்பை அடையாளப்படுத்தும் புகைப்படங்களும் பதிவுகளும் இருக்கும். பேஸ்புக் பரிந்துரைக்கும் வீடியோவை உங்கள் விருப்பம் போல திருத்தி அமைக்கலாம். பொருத்தமான தீமை தேர்வு செய்து அதில் இடம் பெறும் புகைப்ப்டங்களையும் பதிவுகளையும் எடிட் செய்யலாம். எல்லாம் தயாரான பிறகு அதனுடன் நன்றி தெரிவிக்கும் வாசகத்தை எழுதி தனிப்பட்ட டச்சுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ உங்கள் டைம்லைனில் தோன்றும். அதில் உங்கள் நண்பரும் டேக் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் டைம்லைனிலும் தோன்றும். அடிப்படையில் , இந்த தேங்க்யூ வீடியோ வசதி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட லுக் பேக் வீடியோ தொகுப்பு வசதியின் இன்னொரு வடிவம் தான் என்று ஒரு கருத்து இருக்கிறது. டைம்லைனில் தோன்றும் வீடியோ பொதுப்பார்வைக்கு வரும் போது எப்படி தனிப்படதாக இருக்கும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதோடு தேங்க்யூ வீடியோ பெற்றவர்கள் பதிலும் தேங்க்யூ வீடியோ அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவார்களா? என்றும் கேட்கப்படுகிறது.பயனாளிகளுக்கு எப்படியோ பேஸ்புக்கிற்கு இந்த சேவை முக்கியம். சமீபத்தில் வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்புடன் பேஸ்புக் போட்டி போடக்கூடிய அளவுக்கு அதன் வழியே வீடியோக்கள் பகிரப்படுவதாக செய்தி வெளியானது.

பேஸ்புக் இந்த நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம். தேங்க்யூ வசதி பேஸ்புக் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகிறதா என்பதையும் அதைவிட முக்கியமாக பயனுள்ளதாக இருக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேங்க்யூ வசதியை தவிர பேஸ்புக் புதிய இடங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியையும் சத்தமில்லாமல் அறிமுகம் செய்திருக்கிறது தெரியுமா? பேஸ்புக் பிலேசஸ் எனும் இந்த வசதி மூலம் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்ளலாம். பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் சுற்றுப்பார்க்க வேண்டிய இடங்கள் மட்டும் அல்ல, ரெஸ்டார்ண்ட்கள்,ஹோட்டல்கள், பார்கள், சுற்றுலா இடங்கள், பள்ளிகள், கலைக்கூடங்கள் என சகல விதமான இடங்களையும் பரிந்துரைக்கிறது. இவை எல்லாமே பேஸ்புக் வலைப்பின்னலில் பகிரப்படும் தகவல்களின் அடிப்படையில் திரட்டப்பட்டு அவற்றின் லைக் அளவுக்கு ஏற்ப பட்டியலிடப்பட்டவை. இந்த பட்டியலை தாண்டியும் பரிந்துரைகளை பார்க்கலாம். அப்படியே நண்பர்களின் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். விரும்பிய நகரை குறிப்பிட்டும் தேடுன் வசதியும் பிரதானமாக இருக்கிறது.

நீங்கள் விரும்பும் நாட்டையும் நகரையும் தேர்வு செய்து அங்குள்ள இடங்களை அலசத்துவங்கலாம். நம்முரான சென்னை துவங்கி அநேக உலக நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இடங்களுக்கான பேஸ்புக் கையேடு என்றும் இது வர்ணிக்கப்படுகிறது. சுற்றுலா செல்வதாக இருந்தாலும் சரி, டின்னருக்கு செல்வதாக இருந்தாலும் சரி அல்லது வீக் எண்டை திட்டமிடுவதாக இருந்தாலும் இந்த சேவையை முயன்று பார்க்கலாம்.பேஸ்புக் தொடர்பான இன்னொரு முக்கிய செய்தி , அதன் பிரைவசி அறிக்கை புதுப்பிக்கப்பட்டு தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. பேஸ்புக் பிரைபசி கொள்கை தொடர்பாக பல காட்டமான விமர்சனங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இந்த அறிக்கை சிக்கலாக, குழப்பமாக புரியாமல் இருக்கிறது என்பது. இதை சரி செய்யும் வகையில் அறிக்கை அல்லது விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.எல்லோரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் இது அமைந்திருப்பதாக சொல்லப்படுகிரது. ஆனால் சர்ச்சைக்குறிய பல அம்சங்கள் தொடர்கின்றன. பேஸ்புக் பிரைவசி கொள்கையை நீஙக்ள் சரியாக புரிந்து கொள்ளலாம் ஆனால் உங்களை பிரைவசையை கட்டுப்படுத்த அல்லது உங்கள் கையில் எடுத்துக்கொள்ள அதிகம் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!