பெற்றோர் , பிறந்த நாடு இதை ரென்டையும் பழிச்சி பேசறவன் மனுஷனே இல்லை!

பெற்றோர் , பிறந்த நாடு இதை ரென்டையும் பழிச்சி பேசறவன் மனுஷனே இல்லை!

நான் இன்னைக்கு நேத்து அல்ல கல்லூரி முடிக்கும் முன்பே காம்பஸில் வெளி நாடு வேலை மற்றும் எம்பிஏ என்னும் காம்போ ஆஃபரில் சென்று அப்படியே 2006 வரை இந்தியாவில் வசிக்கவில்லை. அதன் பின் 2 வருடம் பின்பு 2008ல் இருந்து திரும்பவும் வெளி நாட்டு வாசம். அதனால வெளி நாடு தான் கால் வாழ்க்கை ஆனாலும் இந்தியா மேல் பற்று கொண்டததால் தான் இன்னும் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன். 1999ல் பிரிட்டன் தற்கால குடியுரிமை – 2001ல் சிங்கப்பூர் தற்காலிக குடியுரிமை / 2003 மலேஷியா 2007ல் கனடா மற்றும் 2008ல் அமெரிகக என பல க்ரீன் கார்ட் அல்லது தற்கால குடியுரிமை ஆன பெர்மெனன்ட் ரெஸிடன்ஸ் வைத்திருந்தாலும் இந்தியாதான் என் மூச்சுன்னு இன்று வரை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். (இது சுய புரானம் போன்று தெரிந்தாலும் இது இல்லாமல் இந்த சப்ஜெக்ட் எழுத இயலாது).
ravi nag apr 10
நான் பார்த்து இந்தியாவில் இருந்து என் கம்பெனி பணிக்காக‌ கொண்டு சென்ற பல இந்தியர்கள் இன்று அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் 2011 / 2015ல் அந்த ஆஃபர் எனக்கு இருந்தும் போதும் பச்சை அட்டை என்னும் க்ரீன் கார்ட் மட்டும் போதும், என் நாடு இந்தியாதான் என்று இன்று வரை இருந்த காரணம் என் நாடு. என் நாட்டில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் நாட்டை என் வீடு போல எண்ணுவதால் அது எனக்கு பெரிதாக தெரிவதில்லை. எந்த வீட்டில் தான் பிரச்சினை இல்லை!!. இந்த நேரத்தில பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கட்டுரை வடிவங்களாய் ஃபேஸ்புக்கில் எழுத காரணம் அதுவும் முக்கியமாய் இந்தியாவின் அல்லது இந்தியரால் எதாவது ஒரு அற்புத அல்லது கண்டுபிடிப்பு நிகழுமெனில் அதை தான் அன்றைய சாய்ஸாய் எழுதுவேன்.

இது என்னை அறியாமல் என்னை பெருமைக்கொள்ள செய்வது மட்டுமில்லாமல் சில நல்ல உள்ளங்களையும் மகிழ்விக்கிறது என்பதில் மாற்றூகருத்தில்லை. ஏன் என்றல் 2002 – 206 வரை மலேஷியேன் ஸ்பேஸ் ரிஸர்ச்சில் பணிபுரியும் போதாகட்டும் 2003-2004ல் நாசா மற்றும் போயிங்கில் எம் 3 பிராஜகட் இன்டெர்ன்ஷிப் போனது ஆகட்டும் என்னை ஆனந்தபடுத்தியது இந்தியா / இந்தியர் / இந்திய வின் வெளிக்கழகம் என்னும் மூன்று விஷயங் கள் தான். இதை பல முறை இஸ்ரோவிற்க்கு பணி விஷயமாக போகும் போது தெரிவிப்பேன் அவர்களும் ஆனந்தப்படுவார்கள்.

இந்தியாவின் பெருமை இந்தியாவின் எதிரி நாடுனு ஒரு மாயையை உருவாக்கிய‌ பாகிஸ்தானுக்கு மூன்று முறை போனபோது உன்மையிலே அவர்கள் நம்மின் மேல் கொண்ட நல்ல எண்ணம் / பாசம் / காதல் அப்பட்டமாக தெரிந்தது நெகிழ்ந்தேன். 135 நாடுகளுக்கு மேல் போய் 19 பாஸ்போர்ட்களை தின்று தீர்த்த வகையில் இந்தியா எனக்கு இன்னும் புரிபடாத உலகத்தின் 8வது அதிசயம். அப்பேர்பட்ட நாட்டின் பெருமைகளை அங்கும் இங்கும் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பெருமையாக எழுதினால் வழக்கம் போல முதல் 300 – 500 லைக் கமென்ட்கள் வரை நன்கு போகும் பின்பு இரவாகி படுக்க செல்லும் போது மெதுவாய் வருவார்கள் இந்த சைக்கோக்கள். இந்தியாவை பற்றி அசிங்கமாக பேசுவது, சோத்துக்கே வழியில்லாமல் இங்கு பலர் இருக்கும் போது இந்த ராக்கெட் தேவையானு கேட்பார்கள் ஏன் என்றால் அவர்கள் ரவுத்திரகாரக்களாம், போராளிகளாம் –

ஏன்டா ரவுத்து அமெரிகக ரிச் நாடுதானே அங்கிட்டு கூட எத்தனை பேர் சோறு தண்ணி இல்லாம இருக்க வீடு இல்லாம பிளாட்பாரத்தில இருக்காங்களேன்னு கேட்டா – இது காவி நாடு இங்கிட்டு பாரத் மாதா கீ ஜெய் சொல்ல சொல்றாங்கன்னு டக்குனு மத ரீதியா தாவிட்டு அங்கிட்டு போய் அற்புதம் டோலி / சாட்டையடி டோழி / உங்கள் புகைப்படம் அல்ல மோனலீஸா ஆர்ட்னு ஃபேஸ்புக் ஆன்டிகளுக்கு ஜே போடுவார்கள். சரி அதையும் சுட்டி காட்டினா இங்கு சகிப்புதன்மை இல்லை சமோஸாவுக்குள் உருளைக்கிழங்கு இல்லைனு / சிறுபான்பையினருக்கு மதிப்பு இல்லைனு அவங்களுக்கும் அந்த மதத்திர்க்கும் சம்பந்தம் இல்லாம சவுட்டிவிடுவாங்க – உடனே

போராளியே உங்களுக்கு தெரியுமா உலகத்தின் அதிக மசூதி கொண்ட நாடு இந்தியாதான் / இன்று வரை ஐ நாக்கு அதிகப்படியா ட்ரூப்களை அனுப்பிய வகையில் நெ 1 நாடும் நம்மதான் உலகத்தின் மூன்றாவது பெரிய மிலிட்டரி யும் நம்ம தான் உலகத்தின் 5 வது வின் வெளி வரிசையில் உள்ளது நாமதான்னு என்ன சொன்னாலும் நம்ம ரவுத்தூஸ் தலையில மங்கி குல்லா போட்டுகிட்டு ராத்திரி ஆனதும் இந்தியாவின் பெருமை போஸ்ட்ல வந்து கக்கா பேன்டுட்டு போனாதான் அவகளுக்கு நிம்மதி…………ஆனா ஒன்னுடே உன்னையெல்லாம் மனுஷனா நினைச்சி உன்னை பெத்த அந்த புன்னியாவன்கள் ஆகட்டும் உன்னை நம்பி தாம்பத்யம் செய்த அந்த பத்தினி மகராசியாவது ரென்டு இட்லி கட்டி சட்னிக்காக குறைச்சு பேசிராதே போராளிகளே!!!!!!!! ஏன் என்றால் ஓன்னுதான் சொல்லுவேன் – பெற்றோர் , பிறந்த நாடு இதை ரென்டையும் பழிச்சி பேசறவன் மனுஷனே இல்லை – டாட்.
Jai Hind…..

error: Content is protected !!