பெங்களூரூ To கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி

பெங்களூரூ To  கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி

குறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்கப் போவதாகவும் டிக்கெட் விற்பனையை இன்று வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கப் போவதாகவும் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் விதமாக பெங்களூரு – கோவா இடையே குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டு அதன் முதற்கட்டமாக விளம்பரத்திற்காக அடிப்படை விலையாக ரூ.5 க்கு விமான சேவையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
air-asia-airplane-M
இந்தியாவில் ஏற்கெனவே குறைந்த கட்டண சேவையில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர ஜெட் ஏர்வேஸ் மற்றும் அரசின் ஏர் இந்தியா நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்குப் போட்டியாக ஏர் ஏசியா விமான சேவை களமிறங்கி இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களை இணைப்பதற்கான விமான சேவையை அளிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து தனது முதல் சேவையை வரும் 12 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கோவாவிற்கு துவக்கவுள்ளது..பெங்களூரு நகரில் இருந்து கோவாவிற்கு செல்ல மிகக்குறைந்த கட்டணமாக (வரிகளுடன் சேர்த்து) ரூபாய் 990 மட்டுமே நிர்ணயம் செய்துள்ளதாகவும் அனைத்து சேவைகட்டணங்களும் சேர்த்து 490 ரூபாய் தொடங்கி 990 ரூபாய்க்குள் அடங்கிவிடும் என்றும் அதன் முதற்கட்டமாக விளம்பரத்திற்காக அடிப்படை விலையாக ரூ.5 க்கு விமான சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதன்மை அதிகாரி மிட்டு சந்தியாலா தெரிவித்துள்ளார்.இன்று(30.05.2014) இரவு 9.30 மணிக்கு ஏர்ஆசியா இணையதளத்தில் இதற்கான முன்பதிவு துவங்குகிறது.

Related Posts

error: Content is protected !!